• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நீரவ் மோடி விவகாரம்: ராகுல்காந்திக்கு சவால் விடுத்த சமூக ஆர்வலர்!

நீரவ் மோடி விவகாரம்: ராகுல்காந்திக்கு சவால் விடுத்த சமூக ஆர்வலர்!

சமூக ஆர்வலர் சேஷாத் பூனவல்லா

சமூக ஆர்வலர் சேஷாத் பூனவல்லா

  • News18
  • Last Updated :
  • Share this:
    வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை, டெல்லியில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2013-ம் ஆண்டில் சந்தித்ததாக சமூக ஆர்வலர் சேஷாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த தயாரா என்று ராகுல் காந்திக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

    லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வெளிநாடு செல்வதற்கு முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதேபோல, வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாடு செல்வதற்கு முன்னதாக பிரதமரை சந்தித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டினார். இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள சமூக ஆர்வலர் சேஷாத் பூனவல்லா, டெல்லியில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிரவ் மோடியை, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராகுல் காந்தி சந்தித்ததாக தெரிவித்தார்.

    இதனை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார். இதற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், இதேபோல, ராகுல் காந்தி தயாரா என்றும் சேஷாத் சவால் விடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: