விலை உயர்ந்த பொருளான எலுமிச்சை பழங்களை நண்பர்கள் மணமகனுக்கு பரிசாக வழங்கிய சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
திருமண விழாக்களில் சில நேரங்களில் வழங்கப்படும் வித்தியாசமான பரிசுப்பொருள் வழங்கப்படுவது பலரின் கவனத்தையும் ஈர்த்து பேசு பொருளாக மாறிவிடும். அதுபோல தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வழங்கப்பட்ட பரிசு பொருள் டிரென்டிங் நியூஸாக உருவெடுத்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள தாரோஜி பகுதியில் தினேஷ் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் மணமகனின் நண்பர்கள் அவர் மறக்க முடியாதபடி வித்தியசமான கிப்ட் ஒன்று வழங்க வேண்டும் என முடிவ செய்து, திருமண நாளில் எலுமிச்சை பழங்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் கோடை காலம் உச்சம் தொட்டுள்ளதால் எலுமிச்சை பழத்திற்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கிலோ ரூ.200ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை மகசூலும் இந்தாண்டு குறைந்து காணப்படுவதால் சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
also read : இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேவையைத் தொடங்குவோம் - ஜெட் ஏர்வேஸ் CEO தகவல்
இதை கருத்தில் கொண்டே, மாநிலத்தில் விலை உயர்ந்த பொருளாக திகழும் எலுமிச்சையை மணமக்களுக்கு பரிசளித்துள்ளோம். கோடை காலத்திற்கு ஏற்ற தேவையான பரிசு இது என நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நண்பர்களின் இந்த வித்தியாசமான பரிசால் மணமகன் தினேஷ் தனது மண நாளில் இந்திய முழுவதும் பேமஸ் ஆகியுள்ளார்.
அண்மையில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல திருமணங்களில் பெட்ரோலை பரிசாக அளிப்பதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
- கண்ணன் வரதராஜன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.