உத்தரப் பிரதேசத்தில் 150 கி.மீ தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை - வைரலாகும் புகைப்படங்கள்!

இமயமலை

பனிமூட்டம், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் காண முடியாத நிலை இருந்தது

  • Share this:
    உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிக உயர்ந்த, மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். வழக்கமாக இமயமலைக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து இமயமலையை காண முடியாது. பனிமூட்டம், காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் காண முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், வாகன மற்றும் தொழிற்சாலை மாசுக்கள் குறைந்துள்ளது. மேலும் உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து ஓய்ந்ததையடுத்து, காற்று மாசுபாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேகங்கள் விலகிய நிலையில் இமயமலையின் சிகரங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதனை உள்ளூர் வாசிகள் கண்டு கழித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்ததால் தான் இமயமலை பகுதி தெரிவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர் சஹரன்பூரில் இருந்து புகைப்படக் கலைஞர்கள் இந்த காட்சிகளை கண்டதும் அவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.



    சஹாரன்பூரைச் சேர்ந்த டாக்டர் விவேக் பானர்ஜி, சங்கர் ஐஏஎஸ் உள்ளிட்டோரும் இந்த காட்சிகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த அழகிய காட்சிகளை பகிர்ந்த விவேக் பானர்ஜி, “இது ஓர் அரிய காட்சி. இமயமலை சிகரங்களை சஹாரன்பூர் வடக்குப் பகுதியில் இருந்து வெறும் கண்களிலேயே காண முடிகிறது. மிகவும் தெளிவாக சிகரங்கள் தெரிகின்றன. 30 முதல் 40 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற காட்சிகள் இங்கு தெரிந்ததாம். தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவால் அந்தக் காட்சிகள் தெரிவதில்லை. தற்போது சிகரங்கள் தெரிந்ததால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், அதனால் தான் அதை படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.





    சஹரன்பூர் நகரத்திலிருந்து 150 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ள இமயமலையின் அற்புதமான காட்சி. மூடுபனி, மாசுவால் உருவான மறைவை சூறாவளி காற்று மற்றும் மழை சரி செய்து விட்டது. இதனால் இமயமலை அழகாக தெரிவதாக சஞ்சய் குமார் ஐஏஎஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மலைகள் உத்தரபிரதேசத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published: