ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷை தீண்டிய நல்ல பாம்பு... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி (வீடியோ)

பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷை தீண்டிய நல்ல பாம்பு... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி (வீடியோ)

வாவா சுரேஷ்

வாவா சுரேஷ்

நாகப் பாம்பை பிடித்த வாவா சுரேஷ், அதனை சாக்குப் பையில் போட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நாகம் அவரது வலது தொடையில் தீண்டியது.  இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கேரளாவைச் சேர்ந்த பாம்புபிடி மன்னனான வாவா சுரேஷை நல்ல பாம்பு ஒன்று தீண்டியது. இதில் மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் மன்னனான இவர் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம் முதல் பல வகையான பாம்புகளை மிகவும் லாவகமாக பிடித்து புகழ்பெற்றவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட ராஜநாகங்களையும் 50 ஆயிரம் பிற பாம்புகளை அவர் பிடித்து மீட்டுள்ளார். பாம்பு பிடிக்கும் நிகழ்வின்போது அவர் பலமுறை அவற்றின் கடிக்கும் உள்ளாகியுள்ளார்.

  அந்தவகையில், குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அதனை பிடிக்க வாவா சுரேஷ் சென்றுள்ளார். பின்னர் நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பாம்பை பிடித்த அவர், அதனை சாக்குப் பையில் போட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நாகம் அவரது வலது தொடையில் தீண்டியது.  இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.

  உடனடியாக அங்கு இருந்தவர்கள் வாவா சுரேஷை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாவா சுரேஷுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

  இதேபோல் திருவனந்தபுரம் எம்.பி.யும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், வருந்துகிறேன். கடைசியாக இதுபோன்ற நடந்தபோது நான் அவரை மருத்துவமனையில் சந்தித்தேன், அவர் குணமடைந்தார் என்பதை அறிந்து  நிம்மதியடைந்தேன். திருவனந்தபுரம் மக்களுக்கு அவரது துணிச்சலான சேவைகள் தொடர கடவுள் அவரை காப்பாற்றட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Kerala, Snake