ஹோம் /நியூஸ் /இந்தியா /

கூரியர் பார்சலில் வந்த பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்...!

கூரியர் பார்சலில் வந்த பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தனக்கு வந்திருந்த கூரியர் பார்சலை திறந்து பார்த்தபோது அதில் இருந்து பாம்பு வெளியே வந்ததைப் பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

  ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் தனது வேலை காரணமாக ஒடிசாவில் மயூர்பன்ச் மாவட்டத்தில் ராஜரங்பூர் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு கூரியர் மூலமாக ஒரு பார்சல் வந்துள்ளது.

  கூரியர் பார்சலை திறந்து பார்த்த முத்துக்குமரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் இருந்து பாம்பு வெளியேறியதைக் கண்ட முத்துக்குமரன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து முத்துக்குமரன் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  முத்துக்குமரன் வீட்டுக்கு வந்த வனத்துறையினர் பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

  முத்துக்குமரன் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை டெலிவரி செய்ய, குண்டூரில் கடந்த 9-ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்க்கும் போது அதில் பொருட்களுடன் இருந்த பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

  மேலும் இதுகுறித்து கூரியர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் முத்துக்குமரன் கூறியுள்ளார்.

  வீடியோ பார்க்க: காஞ்சிபுரம் அருகே மர்மப் பொருள் வெடித்து 2 பேர் மரணம்!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Andhra Pradesh