ஹோம் /நியூஸ் /இந்தியா /

WATCH - ஃப்ரிட்ஜுக்குள் வந்த 'புஸ் புஸ்' சத்தம்.. சீறிய பாம்பை லாவகமாக பிடித்த நபர்!

WATCH - ஃப்ரிட்ஜுக்குள் வந்த 'புஸ் புஸ்' சத்தம்.. சீறிய பாம்பை லாவகமாக பிடித்த நபர்!

கர்நாடகா பாம்பு

கர்நாடகா பாம்பு

மழை காலங்களில் பாம்பு அடிக்கடி வீட்டுக்குள் புகுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka | Tamil Nadu

  கர்நாடகாவில் ஃப்ரிட்ஜிற்குள் மறைந்து கொண்ட நாகபாம்பை பாம்பு பிடி வீரர் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

  கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் கோதகெரே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த பாம்பு, பிரிட்ஜ் அருகே மறைந்துவிட்டது.

  இதனை கண்டு அச்சமடைந்த அவர்கள், பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  சம்பவ இடத்திற்கு சென்ற பாம்புபிடி வீரர் பிரிட்ஜின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த பாம்பை லாவகமாக மீட்டார். தொடர்ந்து வனத்துறையினரின் உதவியுடன் பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

  மழை காலங்களில் பாம்பு அடிக்கடி வீட்டுக்குள் புகுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Karnataka, Snake, Viral Video