Home /News /national /

இங்கிலாந்தில் பட்டம் வாங்கிய மகன்.. ஸ்மிருதி இராணி நெகிழ்ச்சி பதிவு

இங்கிலாந்தில் பட்டம் வாங்கிய மகன்.. ஸ்மிருதி இராணி நெகிழ்ச்சி பதிவு

Smriti Irani :மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது மகனின் பட்டமளிப்பு விழாவின் வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் ஸ்மிருதி இராணி. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மை துறை அமைச்சராக உள்ளார். இவர் 2019 பொதுத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேஸ் விலையை எதிர்த்துப் போராடி பெரும் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகன் ஜோர் இராணியின் பட்டமளிப்பு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

    ஜோர் இராணி இங்கிலாந்திலுள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை இந்த ஆண்டு முடித்தார். இந்த வீடியோவை பகிர்ந்த அவர், “இந்த பட்டமளிப்பு உனக்கு வரும் வாய்ப்புகளுக்கான குறியீடாக உள்ளது. உன் திறனுடன் வாழ, உன் கனவுகளை அடைய, உன்னைப் போலப் பொறுப்புடன் இருக்கவும் வாழவும் இது உனக்கு உதவும்” என எழுதியுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Smriti Irani (@smritiiraniofficial)

    மேலும், “உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது. மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். கடவுள் உன்னுடன் இருப்பார்” என எழுதியுள்ளார்.

    இதற்கு துஷார் கபூர் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி போன்ற பலரும் கம்மெண்ட்ஸில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை திவ்யா சேத் ஷாவும், “எனக்குப் பிடித்த சிறுவன்..” என கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை தற்போது வரை ஒரு லட்சத்து 14 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது. ஸ்மிருதி இராணிக்கு ஜோர் என்ற மகனும், ஜோஷி என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: BJP, Instagram, Smriti Irani

    அடுத்த செய்தி