முட்டை ஃப்ரைட் ரைஸ் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்மிருதி இராணி: வாட்டி எடுத்த நெட்டிசன்கள்

ஸ்மிருதி இராணி

 • Share this:
  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி முட்டை ஃப்ரைட்ரைஸ் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

  மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க தலைவர் கோபால் பார்கவா, 2019-ம் ஆண்டு குழந்தைகள் முட்டைகள் சாப்பிட்டால் அவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக வளருவார்கள் என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டையையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், இது குழந்தைகளின் மத விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று தெரிவித்தனர்.

  முட்டை ஃப்ரைட் ரைஸ்


  முன்னதாக, 2018-ம் ஆண்டு தி வயர் செய்தி நிறுவனத்தில் வெளியான சிறப்புக் கட்டுரையில், ‘பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவதில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ஈடுபாட்டுடன் இருக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’முட்டை ஃப்ரைடு ரைஸ் படத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்வினையாற்றிவருகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் முட்டை வழங்குவதை பா.ஜ.க ஏன் எதிர்க்கிறது?


  பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஏன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published: