முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

ஷனெல் இராணி திருமணம்

ஷனெல் இராணி திருமணம்

திருமண விழாக்கள் பிப்ரவரி 7 அன்று ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்களுடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

மத்திய அமைச்சரும், முன்னாள் நடிகருமான ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இராணிக்கும் அர்ஜுன் பல்லாவுக்கும் ராஜஸ்தானின் கிம்சார் கோட்டையில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. தாயும் மகளும் சிவப்பு ஆடையில் ஜொலிக்கும் திருமணத்தின் சில படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஷானெல்லுக்கும் அர்ஜுனுக்கும் 2021 இல் நிச்சயதார்த்தம் நடந்தது.  அவர்களது திருமண விழாக்கள் பிப்ரவரி 7 அன்று ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்களுடன் தொடங்கியது. இப்போது, ​​ஷனெல் இராணி மற்றும் அர்ஜுன் பல்லாவின் கணவன்-மனைவியாக இருக்கும் முதல் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன

ஸ்மிருதி இரானி தற்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஸ்மிருதி இரானி 2001 இல் ஜூபின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜோயிஷ் இரானி மற்றும் ஜோர் இரானி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானியின் முதல் மனைவி மோனா இரானியின் மகள் ஷனெல்.

ஷனெல் இராணி ஒரு வழக்கறிஞர் மற்றும் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர். அதன்பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் தனது எல்எல்எம் பட்டம் பெற்றார். அர்ஜுன் பல்லா கனடாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். 2021 ஆம் ஆண்டில், ஷனெல் மற்றும் அர்ஜுனின் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்மிருதி அறிவித்தார்.

இவர்களது திருமணம் வியாழன் அன்று ராஜஸ்தானின் கிம்சார் கோட்டையில் நடைபெற்றது. திருமணத்தின்போது ஷனெல் சிவப்பு நிற மணப்பெண் லெஹங்கா அணிந்திருந்தார். அதே சமயம் அர்ஜுன் வெள்ளை நிற ஷர்வானி அணிந்திருந்தார். அவர்களது திருமணம் குறித்த அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், விருந்தினர்கள் சிலர் எடுத்த படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

பகலில் கோட்டையில் எடுக்கப்பட்ட ஒரு படமும் இரவு ஒளியில் போட்டோஷூட் எடுக்கும் படமும் இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. அதோடு மணமகள் போலவே ஸ்மிருதி இரானியும் சிவப்பு நிற ஆடையில் திருமண விழாவில் இருக்கும் படம் வெளிவந்துள்ளது.

தற்போது பாரம்பரிய ஹோட்டலாக இருக்கும் கிம்சார் கோட்டை பாஜக தலைவர் கஜேந்திர சிங்கிற்கு சொந்தமானது. இது ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ளது. இது 500 ஆண்டுகள் பழமையானது என்றும் 1523 ஆம் ஆண்டு ராவ் கரமாஸ்ஜியால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கோட்டையின் ஒருபுறம் ஏரியும் மறுபுறம் பாலைவனமும் சூழப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் இருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்கும் காட்சி அவ்வளவு அழகாக இருக்குமாம்.

First published:

Tags: Celebrities Marriage, Smriti Irani