ஸ்மிருதி இராணிக்கு பா.ஜ.க எம்.பிக்கள் நீண்டநேரம் மேஜையைத் தட்டி உற்சாகப்படுத்தியது ஏன்?

ஸ்மிருதி இராணி

ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, எம்.பியாக பதவி ஏற்கும்போது, மற்ற எம்.பிக்களுக்கு மேஜையைத் தட்டியதை விட அதிகமாக தட்டி அவர் உற்சாகப்படுத்தப்பட்டார்.

 • Last Updated :
 • Share this:
  நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் பதவி ஏற்றபோது, மற்ற பா.ஜ.க எம்.பிகள், ஸ்மிருதி இராணிக்கு நீண்ட நேரம் மேஜையைத் தட்டி  உற்சாகப்படுத்தினர்.

  17-வது நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் எம்.பிக்களாக பதவியேற்றனர்.

  மோடி, உள்ளிட்ட பா.ஜ.க எம்.பிக்கள் பதவியேற்றபோது, அக்கட்சி எம்.பிக்கள், மேஜையில் தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, எம்.பியாக பதவி ஏற்கும்போது, மற்ற எம்.பிக்களுக்கு மேஜையைத் தட்டியதை விட அதிகமாக தட்டி அவர் உற்சாகப்படுத்தப்பட்டார்.

  உத்தரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தி எம்.பியாக தேர்வாகியுள்ளார் ஸ்மிருதி இராணி. அதனால்தான், அவருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு. ஸ்மிருதி இராணி எம்.பியாக பதவியேற்கும் போது ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்திருக்கவில்லை. எம்.பியாக பதவியேற்ற ஸ்மிருதி இராணிக்கு, சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published: