• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போஸ்ட்!

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போஸ்ட்!

smriti irani

smriti irani

ஸ்மிருதி இரானியின் பெரும்பாலான போஸ்டுகள் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகளுக்கு ‘பறக்க சிறகுகளைக் கொடுங்கள்’ என்ற அருமையான செய்தியுடன் கூடிய அனிமேஷன் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

  • Share this:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். ஸ்மிருதி இரானியின் நகைச்சுவையான இடுகைகள் ஆன்லைனில் மிகவும் அதிகமாக பகிரப்படும். அவரது பெரும்பாலான போஸ்டுகள் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ்களால் விரும்பப்படுகின்றன, ஏனெனில் அவை மிகவும் அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

பொதுவாக, இன்ஸ்டாகிராமில் தனது வேலை மற்றும் வாழ்க்கை பற்றி அதிகம் பேசும் ஸ்மிருதி, தற்போது சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ஷேர் செய்து வருகிறார். சில நேரங்களில் இன்ஸ்டா ஸ்டோரியில் தனது பாலோயர்ஸ்களுக்காக விலைமதிப்பற்ற ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.

ஸ்மிருதி, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்,  அது ஒரு முக்கியமான செய்தியையும் தெரிவிக்கிறது.அதில் "கடின உழைப்புக்கு மாற்று இல்லை" என்ற உண்மையை தெரிவித்திருந்தார். Will Ferrell என்ற அமெரிக்க நடிகர் கூறிய ஒரு மேற்கோளை ஸ்மிருதி பகிர்ந்து கொண்டார். இந்த செய்தியானது முக்கியமாக திருமணமான தம்பதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது .

Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

அதில், "நீங்கள் ஒரு நபரை திருமணம் செய்வதற்கு முன்பு, அவர்கள் உண்மையில் யார் என்பதைக் காண மிகவும் ஸ்லோவான இன்டர்நெட் சேவையுடன் கூடிய கணினியைப் பயன்படுத்துமாறு கூற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் வேடிக்கையான கமென்டன்ஸ்களை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் ஸ்மிருதியில் கருத்து உண்மை தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். ஸ்மிருதியின் இன்ஸ்டாகிராமை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.

Smriti irani Instagram post


அவரது பெரும்பாலான போஸ்டுகள் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகளுக்கு ‘பறக்க சிறகுகளைக் கொடுங்கள்’ என்ற அருமையான செய்தியுடன் கூடிய அனிமேஷன் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோவை ஸ்மிருதி #BetiBachaoBetiPadhao என்ற ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான அவசியத்தை இந்த வீடியோ மூலம் விளக்கியிருந்தார்.

Also Read:   டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அரசியலில் நுழைவதற்கு முன்பு பேஷன் உலகில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்மிருதி 1998ல் ஃபெமினா மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் ஏக்தா கபூரின் ஹிட் ஷோ ‘கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி’ படத்தில் முன்னணி நடிகையான ‘துளசி’ வேடத்தில் நடித்தார். அந்த ஷோ சுமார் 8 ஆண்டுகள் ரசிகர்கள் ஆதரவுடன் ஒளிபரப்பானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை தொடர்ந்து ஜூபின் இரானி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு சோயிஷ் இரானி மற்றும் ஜோஹர் இரானி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர. 2003ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஷ்மிருதி தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் ஜவுளி அமைச்சராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: