தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்மிருதி ராணிக்கு ‘பல்பு’ கொடுத்த பொதுமக்கள்!
சட்டமன்ற தேர்தலில் விட்டதை நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

ஸ்மிருதி ராணி
- News18
- Last Updated: May 9, 2019, 8:08 AM IST
மத்தியப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கேட்க, மக்கள் கோரஸாக ‘ஆம்’ என்று கூறியதால் அவருக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், மக்களவை தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற ஆர்வம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் விட்டதை நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக உழைத்து வருகிறது.
தனது முக்கிய இந்துத்துவா அஸ்திரத்தின் மூலம் பல தொகுதிகளை அறுவடை செய்ய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவை போபால் தொகுதியில் பாஜக களம் இறக்கியுள்ளது.
குண்டு வெடிப்பு வழக்கில் ஜாமினில் இருக்கும் சாத்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டதை பிரதமர் மோடியும், டிவி நிகழ்ச்சி ஒன்றில் நியாயப்படுத்தினார்.இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டார்.
அப்போது, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டார்.
அதற்கு அனைவரும், “ஆமாம், எங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று கோரஸாக கூறினர். இதனால், ஸ்மிருதி ராணி தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளானார்.
சில நிமிடங்கள் தடுமாறிய அவர் பின்னர், தனது பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றி பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த வீடியோ மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Also See...
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், மக்களவை தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற ஆர்வம் காட்டி வருகிறது.
தனது முக்கிய இந்துத்துவா அஸ்திரத்தின் மூலம் பல தொகுதிகளை அறுவடை செய்ய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவை போபால் தொகுதியில் பாஜக களம் இறக்கியுள்ளது.
குண்டு வெடிப்பு வழக்கில் ஜாமினில் இருக்கும் சாத்வி வேட்பாளராக நிறுத்தப்பட்டதை பிரதமர் மோடியும், டிவி நிகழ்ச்சி ஒன்றில் நியாயப்படுத்தினார்.இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டார்.
அப்போது, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டார்.
அதற்கு அனைவரும், “ஆமாம், எங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று கோரஸாக கூறினர். இதனால், ஸ்மிருதி ராணி தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளானார்.
சில நிமிடங்கள் தடுமாறிய அவர் பின்னர், தனது பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றி பிரசாரத்தை தொடங்கினார்.
स्मृति ईरानी की हुई किरकिरी :
स्मृति ईरानी ने मप्र के अशोकनगर में मंच से पूछा क्या किसानों का कर्जा माफ हुआ है ? तो सभा के बीच में किसानों ने चिल्ला कर बताया “हां हुआ है, हां हुआ है, हाँ हो गया है”।
—अब जनता भी इन झूठों को सीधे जवाब देने लगी है।
“अब तो झूठ फैलाने से बाज़ आओ” pic.twitter.com/N9g64K7xAC
— MP Congress (@INCMP) May 8, 2019