நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலின் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை நாட்டில் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளன. செமி-ஹை-ஸ்பீட் ட்ரெயினான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த வெற்றியுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வரவிருக்கும் வெர்ஷன் வேகமாக மற்றும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் ஓடும் சதாப்தி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் படிப்படியாக புழக்கத்தில் விட இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த வந்தே பாரத் ரயில்களில் சேர் கார் (chair car) அரேஞ்ச்மென்ட் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் ரயில் பயணிகளை கவரும் ஒன்றாக மாறி இருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் ஸ்லீப்பர் வெர்ஷனிலும் அதாவது ஸ்லீப்பர் கோச் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஸ்லீப்பர் வெர்ஷன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக இருக்கும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் வெர்ஷன் மணிக்கு 220 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இருப்பினும் அலுமினியத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஸ்லீப்பர் பெட்டிகள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனிடையே 400 வந்தே பாரத் ரயில்களுக்கான டெண்டரை ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு இம்மாத இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இந்த ரயில்களில் சில உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ரயில்களின் ஸ்லீப்பர் வெர்ஷன்களாகவும் இருக்கலாம். இந்த ரயில்களின் கட்டுமான மற்றும் உற்பத்தி பணிகளுக்கு 4 உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிளானின்படி முதற்கட்டமாக 200 வந்தே பாரத் ரயில்களில் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இருக்கை வசதிகள் இருக்கும்.
அதே நேரத்தில், இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் தண்டவாளத்தில் இயக்க முடியும். இருப்பினும், ரயில் பாதைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும். இந்த ரயில்கள் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாம் கட்டத்தில் 200 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் இருக்கும், இவை அலுமினியத்தால் தயாரிக்கப்படும். ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களின் இரண்டாவது வெர்ஷன் அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.
Also Read : எலெக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி.? சிம்பிளான சில டிப்ஸ்!
இதற்காக டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு, சிக்னல் அமைப்பு, பாலங்கள் சரி செய்யப்பட்டு, வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர, இரு ரயில்வே வழித்தடங்களிலும், ரூ.1,800 கோடி செலவில் மோதல் தடுப்பு தொழில்நுட்ப கவசம் (anti-collision technical armour ) பொருத்தப்பட்டு வருகிறது என ரயில்வே உயரதிகாரி ஒருவர் தகவல் கூறி இருக்கிறார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னையில் உள்ள ஐசிஎஃப், மகாராஷ்டிராவில் லத்தூர் ரயில் தொழிற்சாலை மற்றும் ஹரியானாவில் சோனேபட் உள்ளிட்ட இடங்களில் இந்த 400 ரயில்களும் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Train, Vande Bharat