Home /News /national /

ஸ்கோச்  சிறந்த மாநில ஆட்சித் தரநிலையில் ஆந்திரா முதலிடம்

ஸ்கோச்  சிறந்த மாநில ஆட்சித் தரநிலையில் ஆந்திரா முதலிடம்

ஸ்கோச் மாநில நல்லாட்சி விருது ஆந்திராவுக்கு.

ஸ்கோச் மாநில நல்லாட்சி விருது ஆந்திராவுக்கு.

ஸ்கோச் மாநில ஆட்சித் தரவரிசையில் ஆந்திரப் பிரதேச அரசு மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மேற்கு வங்காளமும், ஒடிசா 3வது இடத்தையும், குஜராத் 4வது இடத்தையும், மகாராஷ்டிரா 5வது இடத்தையும் பிடித்தன. அண்டை மாநிலமான தெலுங்கானா 6வது இடத்தைப் பிடித்தது.

மேலும் படிக்கவும் ...
    ஸ்கோச் மாநில ஆட்சித் தரவரிசையில் ஆந்திரப் பிரதேச அரசு மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மேற்கு வங்காளமும், ஒடிசா 3வது இடத்தையும், குஜராத் 4வது இடத்தையும், மகாராஷ்டிரா 5வது இடத்தையும் பிடித்தன. அண்டை மாநிலமான தெலுங்கானா 6வது இடத்தைப் பிடித்தது.

    புது டெல்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான ஸ்கோச் நடத்திய தரவரிசை மதிப்பீட்டில், ஆந்திரப் பிரதேசம் காவல்துறை மற்றும் பாதுகாப்பு, விவசாயம், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆகியவற்றிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    ஒரு வெளியீட்டின் படி, மாநிலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. 2020 ஆம் ஆண்டிலும், ஆந்திரப் பிரதேசம் நிர்வாகத்தில் முதலிடத்தைப் பிடித்தது. ஆந்திரப் பிரதேசம் 2018 இல் இரண்டாவது இடத்தில் இருந்தது, பின்னர் அது 2019 இல் 4 வது இடத்திற்கு சரிந்தது என்று ஸ்கோச் தெரிவித்துள்ளது.

    ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தரவரிசையில் ‘ஸ்டார்’ ஆக உள்ளது. ஸ்டார் தகுதி என்பது 1 முதல் 5 வரை உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் வகையாகும்.

    2021 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் இருந்து ‘ஸ்டார்’ தரவரிசைப் பெற்ற ஒரே மாநிலம் ஆந்திராவாகும். மேற்கு வங்காளம், ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மற்ற மாநிலங்களாகும்.

    இதற்கிடையில், தெலுங்கானா 2020 இல் ஒன்பதாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்தைப் பெறுவதன் மூலம் தனது செயல்திறனை மேம்படுத்தி, அதன் மூலம் ‘செயல்திறன் மாநிலம்’ தரவரிசையைப் பெற்றது.

    2021 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் ஸ்டார் ஸ்டேட்ஸ் என்று கூறப்படும் மாநிலங்களில் விவசாயம், தொழில் செய்வதற்கான ஏற்ற சூழல், மின்சாரம் மற்றும் எரிசக்தி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் நீர் ஆகியவற்றில் நன்றாகத் திகழ்வதாகவும் "பொது நிர்வாகம், சுகாதாரம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பாதுகாப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் இம்மாநிலங்கள் பின் தங்கியுள்ளதாகவும் ஸ்கோச் அறிக்கை மேலும் கூறியது.

    ஸ்டார் மாநிலங்களாக தகுதி பெற்ற மாநிலங்கள் எடுத்த நல்லாட்சி முயற்சிகளில் விவசாயத்தின் பங்கு 1.3 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், இந்த மாநிலங்களில் எடுக்கப்பட்ட மொத்த நல்லாட்சி முயற்சிகளில் விவசாயத்தின் பங்கு 4.7 சதவீதமாக இருந்தது. “தொற்றுநோயின் போது நட்சத்திர மாநிலங்களில் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான நல்லாட்சி முயற்சிகள் முதன்மை பெற்றன என்று அறிக்கை கூறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Andhra cm, Andhra Pradesh, Jagan mohan reddy

    அடுத்த செய்தி