தனது சைக்கிளின் குறுக்கே வந்து அடிபட்ட கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய சிறுவனின் செயல் பாராட்டுகளை குவித்துவருகிறது.
மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துள்ளது. அதனை கவனிக்காத சிறுவன் சைக்கிளால் கோழிக்குஞ்சு மீது மோதியுள்ளான்.
அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து பதறிய சிறுவன், உடனடியாக அதனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளான். மேலும், தனது கையில் இருந்த சில 10 ரூபாய் நோட்டையும் அச்சிறுவன் கோழிக்குஞ்சின் சிகிச்சைக்காக எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க கூறியுள்ளான்.
ஒரு கையில் கோழிக்குஞ்சுடனும், மறுகையில் பணத்துடனும் சிறுவன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
எனினும், அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டதை சிறுவனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். “அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட தனித்துவமாக இருக்கிறான்” என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
எனினும், பலரும் சிறுவனின் இரக்கத்துக்கு பாராட்டுகளை குவித்துவருகின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mizoram