மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

மகாராஷ்டிராவில் இதுவரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,761 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!
தாஜ் ஹோட்டல்
  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா மிக வேகமாகப் பரவிவருகிறது. மகாராஷ்டிராவில் இதுவரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,761 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையிலுள்ள மிகவும் பிரதபலமான தாஜ் ஹோட்டல் நிறுவனம் அவர்களுடைய ஹோட்டல்களை மருத்துவர்கள் தங்குவதற்கு மற்ற அவசர தேவைகளுக்கும் வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த ஹோட்டல் நிறுவனம் தெரிவித்திருந்தது.


இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் கவுதம் பன்சாலி, ‘தாஜ் ஹோட்டலைச் சேர்ந்த ஆறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அவர்கள், தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்தார். இதுகுறித்து தெரிவித்த ஹோட்டல் நிர்வாகம், ‘கொரோனா பாதித்த நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகிய சக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Also see:
First published: April 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading