ஹோம் /நியூஸ் /இந்தியா /

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

விமான நிலையம்

விமான நிலையம்

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று ஒரு நாளில் புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3, 428 ஆக உயர்ந்துள்ளது. இதில் சீனாவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபரும் அடங்குவார். அவர், உருமாறிய BF7 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய, பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பீகார் மாநிலம் கயா விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் மியான்மர் சேர்ந்த அவர்கள், ஹோட்டல் ஒன்றில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோலவே கொல்கத்தா விமான நிலையம் வந்த வெளிநாட்டைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதில் ஒருவர் துபாயைச் சேர்ந்தவர், மற்றொருவர் மலேசியாவைச் சேர்ந்தவர். இருவரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona positive, Omicron BF 7 Variant