உத்தர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதி விபத்து: 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு..

விபத்து நடந்த கார்

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 

 • Share this:
  உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நபாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ப்ரயாக்ராஜ் - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாணிக்பூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

  திருமண நிகழ்வுக்குச் சென்று மகிழ்ச்சியாகத் திரும்பிய 14 பேர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  மேலும் படிக்க...டெல்லி: பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம்..  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: