Home /News /national /

ஆண் நண்பருடன் பேசியதால் மனைவி மீது சந்தேகப்பட்டு மரத்தில் கட்டிவைத்து அடித்த கணவன்.. 6 பேர் கைது

ஆண் நண்பருடன் பேசியதால் மனைவி மீது சந்தேகப்பட்டு மரத்தில் கட்டிவைத்து அடித்த கணவன்.. 6 பேர் கைது

மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்

மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்

தனது அத்தையின் வீட்டுக்கு பெண் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநரை பார்த்துள்ளார். இதையடுத்து தன்னை வீட்டில் விட்டுவிடும்படி அவரிடம் கூறியுள்ளார்

    ஆண் நண்பரிடம் பேசிய மனைவி மீது சந்தேகப்பட்டு கணவரும் உறவினர்களும் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் ராஜஸ்தானில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பன்ஸ்வாரா காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் மீனா கூறுகையில், ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து ஆறு பேர் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டோம். அப்போது குற்றச் செயலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், இருவர் சிறார்கள். இந்த ஆறு பேரில் பெண்ணின் கணவர் அவரது கணவர் வீட்டார் அடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.  தனது அத்தையின் வீட்டுக்கு பெண் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநரை பார்த்துள்ளார். இதையடுத்து தன்னை வீட்டில் விட்டுவிடும்படி அவரிடம் கூறியுள்ளார். அதன்படி, அவரை பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றுகொண்டு சென்றார். மற்றொரு நபருடன் ஆட்டோவில் வருவதை பார்த்த பெண்ணின் அத்தை இது குறித்து அப்பெண்ணின் கணவனிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து பெண்ணை அவரது கணவரும் அவரது உறவினர்களும் ஏழு மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், அது வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.


    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை பாஜகவின் கையில் எடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. ஜார்கண்ட்டில் ஆப்ரேஷன் தாமரை?

    பாஜக இளைஞரணி பிரிவு தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா இந்த காணொலியை ட்விட்டரில் பதிவிட்டு, தேசிய மகளிர் ஆணையத்தை டேக் செய்துள்ளார். சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறையை தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்தவுள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு பதில் அளித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Extramarital affair, Husband Wife, Rajasthan

    அடுத்த செய்தி