மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதா? கொதித்தெழுந்த சிவசேனா: பின்வாங்கும் பா.ஜ.க

மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதா? கொதித்தெழுந்த சிவசேனா: பின்வாங்கும் பா.ஜ.க
சர்ச்சைக்குள்ளான புத்தகம்
  • News18
  • Last Updated: January 13, 2020, 11:18 PM IST
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியை சத்திரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள புத்தகத்தை யாராவது வைத்திருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் சமீபத்தில், 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்திற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவுத் இந்தப் புத்தகம் குறித்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மகாராஷ்டிரா பா.ஜ.க இந்தப் புத்தகம் குறித்து அவர்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். சத்திரபதி சிவாஜியை இந்த உலகத்தில் யாருடனும் ஒப்பிட முடியாது. ஒரே ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதுபோல ஒரு பேரரசர் சிவாஜிதான், சத்திரபதி சிவாஜி. பிரதமரை திருப்திப்படுத்த சில விசுவாசமான அடிமைகள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள்தான் அவருக்கு பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.


பா.ஜ.க அவர்களை அகற்ற வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் புத்தகத்தை உடனடியாக தடை செய்யவேண்டும். இந்தப் புத்தகம் டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் யாரிடமாவது இருந்தது தெரிந்தால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க எம்.எல்.ஏக்களை இந்தப் புத்தகத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் புத்தக வெளியீட்டுக்கும் பா.ஜ.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முழுவதும் எழுத்தாளரின் எண்ணம்தான்’ என்று மாநில பா.ஜ.க இந்த விவகாரத்திலிருந்து விலகியுள்ளது.

Also see:
First published: January 13, 2020, 11:18 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading