பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் 144 தடை தளர்ப்பு!

பாகிஸ்தான் செல்லும் சம்ஜவ்தா விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே பாகிஸ்தான் இந்த சேவையை ரத்து செய்துள்ளதால், இந்தியாவின் தரப்பிலும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: August 12, 2019, 8:09 AM IST
பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஜம்மு-காஷ்மீரில் 144 தடை தளர்ப்பு!
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: August 12, 2019, 8:09 AM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச், உதம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான மாநில மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த தடை தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 6 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு விலக்கப்பட்டது. இதனால் மக்கள் கடைவீதிகளில் அதிகளவில் திரண்டனர். இதே போல உதம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதால் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

காஷ்மீரில் செல்போன் டவர்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசு சார்பில் 300 தொலைபேசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காய்கறிகள், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை வீடு வீடாக சென்று விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் செல்லும் சம்ஜவ்தா விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே பாகிஸ்தான் இந்த சேவையை ரத்து செய்துள்ளதால், இந்தியாவின் தரப்பிலும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்களை முழுவீச்சில் நிறைவேற்றுவதற்காக மத்திய அரசின் வரி வசூலில், கணிசமான பகுதியை காஷ்மீருக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also see... குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற சைக்கோ

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...