நிர்மலா சீதாராமனின் ‘சிம்பாலிக்’ புடவை: மேற்கு வங்க மக்களை ஈர்க்கும் ‘சென்ட்டிமென்ட்’

நிர்மலா சீதாராமனின் ‘சிம்பாலிக்’ புடவை: மேற்கு வங்க மக்களை ஈர்க்கும் ‘சென்ட்டிமென்ட்’

நிர்மலா சீதாராமன்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தன் பட்ஜெட் குழுவுடன் கேமரா முன்னால் தோன்றிய போது மேற்கு வங்கத்தைக் குறிவைத்து சிம்பாலிக்காக தன் உடைத்தெரிவை மேற்கொண்டிருந்தார்.

  • Share this:
இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தன் பட்ஜெட் குழுவுடன் கேமரா முன்னால் தோன்றிய போது மேற்கு வங்கத்தைக் குறிவைத்து சிம்பாலிக்காக தன் உடைத்தெரிவை மேற்கொண்டிருந்தார்.

இன்று பட்ஜெட் தாக்கலைப் பார்க்கும் மேற்கு வங்க மக்கள் நிச்சயம் இந்தப் புடவைக் குறியீட்டை கவனமேற்கொண்டிருப்பார்கள்.

கைத்தறி மீது நிர்மலா சீதாராமனுக்கு அலாதிப்பிரியம் உண்டு. இன்று பட்ஜெட்டுக்காக அவர் அணிந்த உடை சிகப்பு-வெள்ளை வர்ணம் கொண்டதாகும். இது பெங்காலில் ‘laal paad’ புடவை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புடவையை மேற்கு வங்கப் பெண்கள் முகூர்த்த நாட்களில் அணிவது வழக்கம்.

இது குறிப்பாக மேற்கு வங்கத்தின் ஆன்மாவான துர்காபூஜையுடன் தொடர்புடையது. இதன் 10ம் நாளில் பெண்கள் அங்கு லால்-பாத் புடவை அணிந்து துர்க்கையம்மனுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள்.

இந்தப் புடவையை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பண்பாட்டுக் குறியீடை சூசகமாக மேற்கு வங்க மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இப்படி மேற்கு வங்கத்தை தேர்தலுக்காக தன் புடவைக்குறியீடு மூலம் மேற்கு வங்க மக்கள் மனங்களைக் கவர்ந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரைத் தொடக்கத்திலேயே ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டினார்.

“விடியல் இன்னும் இருளாக இருக்கும் போது நம்பிக்கைப் பறவை ஒளியை உணருகிறது” என்ற பொருளில் வரும் கவிதையாகும் அது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிர்மலா சீதாராமனின் உடை குறியீட்டை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது, கடந்த பட்ஜெட்டில் அடர் மஞ்சள் புடவை கட்டியிருந்தார். அது வசந்த பஞ்சமிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்த பட்ஜெட்.

இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மக்களை ஈர்க்கும் விதமாக சிகப்பு-வெள்ளை சேர்க்கையில் தோன்றி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
Published by:Muthukumar
First published: