ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் தேர்தலை நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி

கேரளாவில் தேர்தலை நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி

கேரளாவில் மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கேரளாவில் மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி இது தொடர்பாக கேரளாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரளாவில் சட்டசபை தேர்தல் முடியும் வரை மாநிலங்களவை தேர்தலை நடத்தக்கூடாது என மத்தியில் ஆளும் பாஜக அரசு விரும்புகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் சட்டசபை இடங்களில் மாற்றம் வரும் என அக்கட்சி கருதுகின்றது.

  கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை இடங்களில் 2 இடங்களை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வைத்திருக்கிறது. எனவே அதை மாற்றுவதற்கு இந்த சூழ்ச்சியை பாஜக பயன்படுத்துகிறது. ஆயினும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், எந்தவித அழுத்தங்களுக்கு அடிபணியாமலும் இருக்க வேண்டும். மாநிலங்களவை தேர்தலை ஒத்தி வைத்திருப்பது வினோதமாகவும், சந்தேகம் அளிக்கும் வகையிலும் இருக்கின்றது. இந்த முடிவு அரசியல் சாசனத்திற்கே எதிரானது.

  முன்  எப்போதும் இல்லாதவகையில் கேரளாவில், தேசிய பேரிடர்கள் நிகழ்ந்தபோதும் கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசு அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயலாற்றியது. அத்துடன், மத்திய அரசின் கடுமையான மக்கள் விரோதப் போக்கை எதிர்கொண்டது. மிகக் குறைந்த அளவு நிதியையே கேரள மாநிலதிற்கு மத்திய அரசு வழங்கியது.

  பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே இந்துத்துவா தொடர்பான போட்டி நிலவுகிறது. இந்துத்துவா கோஷங்களை எழுப்பி, மக்களை பிரிப்பதில் பாஜகவை விட காங்கிரஸ் அதிகமாக ஈடுபடுகிறது. ஆனால் அரசியலில் இருந்து மதத்தையும், நம்பிக்கையும் வேறுபடுத்துவதில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கின்றன. இவ்வாறு மதசார்பின்மை பக்கம் இருப்பதால், இடதுசாரிகள் பாஜகவால் குறிவைக்கப்படுகின்றன. சபரிமலை விவகாரத்தை பொறுத்தவரை அது நீதிமன்ற விசாரணையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேறு பிரச்சினைகள் இல்லாததால், சபரிமலை விவகாரத்தை மற்ற கட்சிகள் எழுப்புகின்றன.” என்று கூறினார்.

  Must Read :  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படும் சங்கேத வார்த்தைகள்!

  கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், அந்த பதவிகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு சில பிரச்னைகளை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அந்த தேர்தலை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து, கேளர முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Election 2021, Kerala, Marxist Communist Party