விமானத்தில் சில பயணிகள் தனது சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். GO FIRST விமான நிறுவனமும் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 5ஆம் தேதி கோவாவில் இருந்து டெல்லி செல்லும் GA-372 விமானத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இரு பயணிகள் ஏறியுள்ளனர். அந்த இரு பயணிகளும் தீவிரமான மது போதையில் இருந்துள்ளனர். விமானத்திற்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்ததில் இருந்தே விமான ஊழியர்களிடமும் அருகே அமர்திருந்திருந்த சக பயணிகளிடமும் தகாத வார்த்தைகளை பேசி கூச்சிலிட்டுள்ளனர்.
இவ்வாறு செய்யக்கூடாது என விமான ஊழியர்கள் எச்சரித்த போதும் அவர்கள் நிறுத்தவில்லை. மேலும், விமானத்தில் இருந்த பெண் ஊழியர்களை ‘எங்கள் அருகே வந்து அமர்ந்துகொள், பேசிக்கொண்டிரு’ என்று வற்புறுத்தி சில்மிஷம் செய்துள்ளனர். நிலை கைமீறி போகத் தொடங்கியதால், விமான ஊழியர்கள் பாதுகாவலர்களின் உதவியுடன் இரு பயணிகளையும் விமானத்தை விட்டு கீழே இறக்கி வெளியேற்றினர்.
இதையும் படிங்க: பைக்கில் ரைட் வர மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கிய நபர்...அதிர்ச்சி வீடியோ...!
அத்துடன், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் இந்த சம்பவம் குறித்து GO FIRST நிறுவனம் புகார் அளித்துள்ளது. ஏற்கனவே, ஏர் இந்தியா விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Flight, Goa