பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அண்ணனைக் கொன்ற தங்கை - மகன் மீதான குற்றச்சாட்டுக்கு பெற்றோர்கள் மறுப்பு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள இட்டாவா மாவட்டத்தில் 20 வயது பெண்ணொருவர் தனது அண்ணனைக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அண்ணனைக் கொன்ற தங்கை - மகன் மீதான குற்றச்சாட்டுக்கு பெற்றோர்கள் மறுப்பு
மாதிரிப் படம்
  • Share this:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இட்டாவா மாவட்டத்தில் 20 வயது பெண்ணொருவர் தனது அண்ணனைக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தீபக் ராஜ்புத் என்பவர் தனது சொந்த ஊரிலுள்ள நிறுவனம் ஒன்றில் கணினி தொடர்பாகப் படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் தம் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தன் தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் அவர் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரிடமிருந்து தப்பிப்பதற்காக அவரது தங்கை திருப்பித் தாக்கியுள்ளார். அரிவாளாலும் அம்மிக் கல்லாலும் தாக்கியதில் தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, தீபக்கின் தங்கை அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல்துறை அதிகாரியான வைபவ் பாண்டே கூறுகையில், கோட்வாலி காவல் நிலையத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்தப் பெண் சரணடைந்தார். அவர் இருப்பிடத்துக்கு காவலர்களை அழைத்துச் சென்றபோது, அவரது அண்ணன் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் கிடந்தார். மருத்துவர்களிடம் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள் என்றார்.


மரணம் ஏற்படும் அளவுக்குக் காயப்படுத்தியதாகக் கூறி தீபக்கின் தங்கை மீது கோட்வாலி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 304வது பிரிவின் கிழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபக் மீது அவரது தங்கை வைக்கும் குற்றச்சாட்டை பெற்றோர்கள் மறுத்துள்ளனர். இவர்களின் மகள் மீது உரிய முறையில் விசாரணை நடந்து வருவதாகவும் வியாழக்கிழமை (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
Also see:
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading