Home /News /national /

முர்முவிற்கு ஒடிசாவில் இருந்து பரிசாக போகும் சந்தாலி புடவைகள்!

முர்முவிற்கு ஒடிசாவில் இருந்து பரிசாக போகும் சந்தாலி புடவைகள்!

திரவுபதி முர்மு

திரவுபதி முர்மு

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று காலை டெல்லியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் போது பாரம்பரியமான சந்தாலி சேலையை அணிய வாய்ப்புள்ளது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு இன்று காலை டெல்லியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் போது பாரம்பரியமான சந்தாலி சேலையை அணிய வாய்ப்புள்ளது.

முர்முவின் அண்ணன் மனைவி சுக்ரி துடு,  கிழக்கு இந்தியாவில் சந்தால் பெண்கள் பயன்படுத்தும் சிறப்பு சேலையுடன் டெல்லிக்கு பயணம் செய்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவைக் காண சுக்ரி தனது கணவர் தாரினிசென் துடுவுடன் சனிக்கிழமை  தலைநகருக்குச் சென்றார்.

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்.. வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

“திதிக்கு சந்தாலி பாரம்பரிய புடவையை நான் எடுத்துச் செல்கிறேன், சத்தியப்பிரமாணத்தின் போது அவர் அதை அணிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த நிகழ்வில் அவர் என்ன அணிவார் என்று எனக்குத் தெரியவில்லை. புதிய ஜனாதிபதியின் உடையை ராஷ்டிரபதி பவன் தீர்மானிக்கும்” என்று சுக்ரி கூறினார்.

சந்தாலி புடவைகள்:
சந்தாலி புடவைகளின் பூர்விகம் ஒடிஷாவில் உள்ள மயூர்பஞ்ச் எனும் பகுதி ஆகும்.பெரும்பாலும் வெள்ளை, லேசாக வண்ண சாயல்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. சந்தாலி புடவையின் தனித்துவம் அதன் வெளிர் நிறத்தில் தான்.

பெரும்பாலும் இந்த புடவைகள் கைத்தறியால் நெசவுக்கு செய்யப்படுகிறது. முந்தானையில் குறுக்கு வெட்டு கோடுகளோடு சில அடிப்படை பாரம்பரிய உருவங்களோடு நெய்யப்படுகிறது. ஒரு முனையில் சில பட்டைகள் கொண்டவை. சேலை செங்குத்தாக சமச்சீராக மற்றும் இரண்டு முனைகளும் ஒரே மாதிரியுடன் வடிவமைக்கப்படும். சிறப்பு தருணங்களில் சந்தால் பெண்கள் இந்த ஆடையை அணிவார்கள்.


சந்தாலி மரபினரின் விழாவான பஹா அல்லது பூக்கள் திருவிழாவில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சந்தாலி ஆடைகளையே அணிவர். அவர்களது திருமண விழாக்களில் மணமக்கள் சந்தால் ஆடைகளை அணிகின்றனர்.

சந்தாலி துணி என்பது ஆண் , பெண் இருவருக்கும் பொதுவானது. பெண்கள் மடிப்பு எடுத்து அதை சலையாக கட்டுகின்றனர். ஆண்கள் அதை வேட்டியைப்போல் கட்டுகின்றனர்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூருக்கு அருகிலுள்ள உபர்பேடா கிராமத்தில் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்கும் சுக்ரி, முர்முவுக்கு 'அரிசா பிதா' என்றும் அழைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு அப்பத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Draupadi Murmu, President Droupadi Murmu, Sarees

அடுத்த செய்தி