ஜூலை முதல் பஞ்சாப்பில் பிளாஸ்டிக் தடை : ராகுல் திவாரி
ஜூலை முதல் பஞ்சாப்பில் பிளாஸ்டிக் தடை : ராகுல் திவாரி
பிளாஸ்டிக் தடை
Plastic ban in Punjab: ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச சுற்றுசூழல் தினத்தையொட்டி நிறுவனங்களும் அரசுகளும் தங்கள் சமூக அக்கறையின் வெளிப்பாடாக, புதுப்புதுத் திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நிகழ்த்தி நெகிழிகள் ஜூலை மாதம் முதல் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச சுற்றுசூழல் தினத்தையொட்டி நிறுவனங்களும் அரசுகளும் தங்கள் சமூக அக்கறையின் வெளிப்பாடாக, புதுப்புதுத் திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஞாயிறு அன்று பஞ்சாப் மாநிலம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிகள் ஜூலை மாதம் முதல் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
மக்காத தன்மை கொண்ட நெகிழியின் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்யவேண்டிய அவசர நிலையில் உலக நாடுகள் இயங்கி வருகிறது.
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக ஹிமாலச்சப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் முழு தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நெகிழி பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு அண்டைய மாநிலமான கேரளா நெகிழிகளுக்குத் தடை விதித்தது. 2019-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2022 சுற்றுசூழல் தினத்தில் பஞ்சாப் மாநிலமும் தடை விதித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மாநிலச் செயலர் ராகுல் திவாரி, 2022ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற 'மெய்நிகர் மாநில அளவிலான விழா'வில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான மாநில அரசின் முடிவை அறிவித்தார். அதன்படி, ஜூலை முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிக்கான தடை அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
"சுத்தம் மற்றும் பசுமை" என்ற இலக்கின் கீழ், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளைக் கைவிடவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியது.
திவாரியின் கூற்றுப்படி, முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் நிர்வாகம் "நமது மரியாதைக்குரிய குருக்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பஞ்சாபை தூய்மையாகவும், பசுமையாகவும், மாசு இல்லாததாகவும் மாற்ற அர்ப்பணித்துள்ளது" என்கிறார். அதன்படி பஞ்சாபை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
55 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் :
இத்துடன், மாநிலம் முழுவதும் 55 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதாக அறிவித்தார். இந்த அதி நவீன ஆலைகள் குறிப்பிட்ட அளவு நீர் மாசுபாட்டைக் குறைக்கும். அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விவசாயம் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் திவாரி.
ஷாஹீத் பகத் சிங் பஞ்சாப் மாநில சுற்றுச்சூழல் விருது :
இதற்கிடையில், அவர் ஷாஹீத் பகத் சிங் பஞ்சாப் மாநில சுற்றுச்சூழல் விருதை நிறுவுவதாக அறிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்புகளிப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றார்.
புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக தனிநபர்கள்/அமைப்புகள் மேற்கொண்ட சிறந்த உழைப்புக்கான அங்கீகாரமாக இருக்கும் என்றார்.
Published by:Ilakkiya GP
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.