• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நிகாங் சீக்கிய குழுவின் பரபரக்கும் பின்னணி! விவசாயிகள் போராட்ட களத்தில் கொடூர கொலைக்கான காரணம் என்ன?

நிகாங் சீக்கிய குழுவின் பரபரக்கும் பின்னணி! விவசாயிகள் போராட்ட களத்தில் கொடூர கொலைக்கான காரணம் என்ன?

Nihangs

Nihangs

நிகாங்குகள் சீக்கியர்கள் என்ற போதிலும் சீக்கியர்கள் இருந்து மாறுபட்ட உடைகள், தலைப்பாகை, தோற்றத்துடன் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

  • Share this:
டெல்லி அருகே ஹரியானா மாநிலத்தின் சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் மேடை அருகே பஞ்சாபைச் சேர்ந்த 35 வயதான லக்பிர் சிங் என்ற கூலித்தொழிலாளி கொடூர முறையில் கொல்லப்பட்டு அவருடைய சடலம் அங்கிருந்த போலீஸ் பேரிகேட்டின் மீது கட்டப்பட்டிருந்த. அந்த உடலில் கை மணிக்கட்டும், கால் பகுதியும் துண்டிக்கப்பட்டிருந்தது. உடலும் சிதைக்கப்பட்டிருந்தது.

இந்த கொடூர முறையிலான கொலைச் சம்பவத்தால் விவசாயிகளின் போராட்டக் களம் பரபரப்பானது. கொலை சம்பவம் தொடர்புடைய மூன்று வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோக்களில், கொல்லப்படும் முன்னர் லக்பிர் சிங்கின் கை மணிக்கட்டு, காலின் பகுதி துண்டிக்கப்பட்டிருப்பதும் அவரின் அருகே நிகாங் எனும் சீக்கிய வீரர் குழுவைச் சேர்ந்தவர்கள் லக்பிர் சிங்கிடம் வீராவேசமாக பேசுவதும் தெரிந்தது. நிகாங் அமைப்பைச் சேர்ந்தவர்கள் லக்பிர் சிங்கை துடிதுடிக்க கொலை செய்திருந்தது இதன் மூலம் அம்பலமானது. நிகாங் குழுவினர் ஆயுதங்களை கொண்டிருக்கும் சீக்கிய போர் வீரர்கள் என அறியப்படுகிறார்கள்.

லக்பிர் சிங்குக்கும் - நிகாங் குழுவுக்கும் என்ன சம்பந்தம்:

கொல்லப்பட்ட லக்பிர் சிங் பஞ்சாப் மாநிலம் டரன் டர்ன் மாவட்டத்தில் உள்ள சீமா கலன் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 8, 10 மற்றும் 12 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கடந்த 8 மாதமாக தனியாக வசித்து வருகிறார். லக்பிர் சிங்கிற்கு ஒரு தங்கை இருக்கிறார். இருவரின் பெற்றோரும் முன்னதாகவே இறந்துவிட்டதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் லக்பிர் மற்றும் அவரின் தங்கையை தத்தெடுத்து வளர்த்தனர்.

Also read: விவசாயிகள் போராட்ட களத்தில் சிதைக்கப்பட்ட உடல்.. கொடூரமான கொலை.. வைரல் வீடியோ

லக்பிர் சிங்கிற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் ஏன் அங்கு சென்றார் எனவும் புரியவில்லை, லக்பிர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என அவரின் கிராமத்தினர் தெரிவித்ததாக இந்தியாடுடே செய்தி வெளியிட்டுள்ளது.

யார் இந்த நிகாங்?

நிகாங் என்பவர்கள் சீக்கிய ஆயுதமேந்திய குழுவினர். இவர் ஃபதே சிங்கின் வழியைப் பின்பற்றியவர்கள். இவர்கள் பண்டைய காலத்தில் போர் வீரர்களாகவும், போர் களத்தில் தீரத்துடன் சண்டையிட்டவர்களாகவும் அறியப்படுகிறார்கள்.

Also read:  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி எம்.பியை தேவாலயத்தில் படுகொலை செய்த தீவிரவாதி!

நிகாங்குகள் சீக்கியர்கள் என்ற போதிலும் சீக்கியர்கள் இருந்து மாறுபட்ட உடைகள், தலைப்பாகை, தோற்றத்துடன் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் வாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்.

மகாராகா ரஞ்சித் சிங் ஆட்சியின் போது நடைபெற்ற ஆப்கன் - சீக்கிய போரில் குறிப்பாக அகமது ஷா அப்தாலிக்கு எதிராக தீரத்துடன் போரிட்டனர்.

10வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் காலத்தில் நிகாங் குழு தோன்றியதாக நம்பப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: