நிரவ் மோடி குடும்பத்தாரின் வங்கிக்கணக்குகளை முடக்குங்கள்- சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு

சமீபத்தில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சார்ந்த சுவிஸ் வங்கிக்கணக்குகளை முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்தது.

Web Desk | news18
Updated: July 2, 2019, 5:26 PM IST
நிரவ் மோடி குடும்பத்தாரின் வங்கிக்கணக்குகளை முடக்குங்கள்- சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு
நிரவ் மோடி
Web Desk | news18
Updated: July 2, 2019, 5:26 PM IST
பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் குடும்பத்தாரின் வங்கிக்கணக்குகளை முடக்குங்கள் என சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பணமோசடி செய்து லண்டனில் கைதாகி உள்ள நிரவ் மோடியின் சகோதரி மற்றும் அவரது கணவரின் பெயரில் சிங்கப்பூரில் வங்கிக்கணக்கு உள்ளது. 44.41 கோடி ரூபாய் சேமிப்பு உள்ள அந்த சேமிப்புக்கணக்கு முடக்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் வங்கியில் பெவிலியன் பாயிண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்கு ஒன்று உள்ளது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள இந்த நிறுவனத்தின் முதலாளிகளான பூர்வி மோடி மற்றும் மைனக் மேத்தா ஆகியோர் நிரவ் மோடியின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆவர்.

தற்போது லண்டனில் கைதாகி உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னரே நிரவ் மோடியின் வங்கிக்கணக்குகள் அமலாக்கத்துறையின் கோரிக்கையின் பெயரில் முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சார்ந்த சுவிஸ் வங்கிக்கணக்குகளை முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்தது.

மேலும் பார்க்க: இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி A80..!
First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...