Home /News /national /

ஊரடங்கு: புதுச்சேரியில் 10 பேர் மட்டுமே கலந்துகொண்ட திருமணம்!

ஊரடங்கு: புதுச்சேரியில் 10 பேர் மட்டுமே கலந்துகொண்ட திருமணம்!

புதுவையில் நடைபெற்ற திருமணம்.

புதுவையில் நடைபெற்ற திருமணம்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளித்தும், முகக்கவசம் கொடுத்ததும், கையுறை கொடுத்ததும் வரவேற்றனர்.

கொரோனா நோய் தொற்றுவால் அனைத்து சுபகாரியங்களும் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன. குறைந்த எண்ணிக்கை மக்கள் அவற்றில் கலந்துகொள்கின்றனர்.

புதுச்சேரி முத்திரையர் பாளையம் சேரன் நகர் பகுதியைச் சார்ந்த கோவிந்தன் என்பவர் மகன் இளம்பரிதி என்பவருக்கும் திருவண்டார்கோவில் பகுதியைச் சார்ந்த ராமமூர்த்தி என்பவர் மகள் வசந்தி என்பவருக்கும் அவர்களது வீட்டில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்தும், திருமணம் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியும் , திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளித்தும், முகக்கவசம் கொடுத்ததும், கையுறை கொடுத்ததும் வரவேற்றனர்.

இந்த திருமணத்தில் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். கலந்துகொண்ட உறவினர்களுக்கு கொரோனா குறித்து மணமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, Marriage, Puducherry

அடுத்த செய்தி