• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேலோ இந்தியா விளையாட்டில் சிலம்பம் சேர்ப்பு - மத்திய அரசுக்கு சிலம்பாட்ட வீரர்கள் நன்றி

கேலோ இந்தியா விளையாட்டில் சிலம்பம் சேர்ப்பு - மத்திய அரசுக்கு சிலம்பாட்ட வீரர்கள் நன்றி

Youtube Video

சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதற்கு தமிழக சிலம்பாட்ட வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    சிலம்பாட்டத்தை கேலோ இந்தியா விளையாட்டில் சேர்த்து அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு சிலம்பாட்ட வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சீருடைப் பணியாளர் தேர்வில் சிலம்பாட்ட வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக சிலம்பம் விளங்குகிறது. இப்போட்டியை, மத்திய அரசு கேலோ இந்தியா விளையாட்டில் சேர்த்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கும் தேசிய அளவிலான இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் சிலம்பமும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகங்கள் சார்பில் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. இப்போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர், வீரர், வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சிலம்ப சம்மேளன தலைவர் ராஜேந்திரன், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் விளையாட்டுத் துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, கூறினார். மேலும், தமிழக சீருடைப் பணியாளர் தேர்வில் சிலம்பாட்ட வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கேலோ இந்தியா பிரிவில், சிலம்பாட்டம் சேர்க்கப்பட்டதற்கு சிலம்பாட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கேலோ விளையாட்டு பிரிவில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதால் அதன் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: