• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை - சிக்கிம் அரசின் முன்மாதிரி நடவடிக்கை!

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை - சிக்கிம் அரசின் முன்மாதிரி நடவடிக்கை!

water bottle

water bottle

குடிநீருக்காக இயற்கை வளங்களை நாட வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில் நீரை விட சிக்கிமில் கிடைக்கும் இயற்கையான நீர் சுகாதாரமானது.

  • Share this:
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் கேன்களுக்கு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் அரசு முன்மாதிரி நடவடிக்கையை எடுத்துள்ளது.

காந்தி ஜெயந்தியன்று சிக்கிம் முதலமைச்சர் பிஎஸ். தமாங், ஆளுநர் கங்கா பிரசாத்துடன் இணைந்து கழிவுகளை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடையே பேசும்போது சிக்கிம் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் கேன்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படும் எனவும் இந்த தடை 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலாகும் எனவும் அவர் அறிவித்தார். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து சிக்கிம் வரக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் சப்ளையை தடுத்து நிறுத்த சிக்கிம் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலமானது சுத்தமான, தரமான குடிநீரை வழங்கும் இயற்கை வளங்களால் ஆசீர்வாதிக்கப்பட்டது. மினரல் வாட்டர் பாட்டில்களுக்கான தடை அமலுக்கு வந்த பின்னர், இனி சிக்கிமில் உள்ள அனைவரும் மினரல் வாட்டர் பாட்டில் பயன்பாட்டில் இருந்து ஒதுங்க வேண்டும். அதற்கு பதிலாக இயற்கை வளங்களை நாட வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில் நீரை விட சிக்கிமில் கிடைக்கும் இயற்கையான நீர் சுகாதாரமானது.

Also Read:  சமந்தா – நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகார்ஜூனா உருக்கம்!

சிக்கிம் இயற்கை நீர் வளங்களால் நிறைந்துள்ளது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகள் மூலம் தண்ணீருக்கான அனைத்து தேவைகளையும் மாநிலத்திற்குள் பூர்த்தி செய்ய முடியும்.

தடை அமலுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் அவசாகம் இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் மினரல் வாட்டர் தொழில் நிறுவனங்கள், கடைகள் தங்கள் கையிருப்பில் இருக்கக் கூடிய மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தி காலி செய்க்து விட வேண்டும்.” இவ்வாறு சிக்கிம் முதல்வர் தமாங் பேசினார்.

Also Read:  இன்று பவானிபூர் இடைத்தேர்தல் முடிவு.. மம்தா பானர்ஜி வெற்றி பெறுவாரா?

சிக்கிமின் முக்கிய சுற்றுலா தலமான லாச்சனில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலத்தடி நீர் கிடைக்கக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூட பிளாஸ்டிக் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ள நிலையில் நாட்டிலேயே முன் மாதிரியாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் அரசு அறிவித்துள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: