சிக்கிம்: பா.ஜ.கவில் இணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள்!

Yuvaraj V | news18
Updated: August 13, 2019, 10:08 PM IST
சிக்கிம்: பா.ஜ.கவில் இணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள்!
பாஜகவில் இணைந்த சிக்கிம் எம்.எல்.ஏக்கள்
Yuvaraj V | news18
Updated: August 13, 2019, 10:08 PM IST
சிக்கிம் மாநிலத்தின் எதிர்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 

சிக்கிம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அவர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். இதன்மூலம் சிக்கிம் சட்டமன்றத்தில் பா.ஜ.க கால் பதிப்பதுடன், பிரதான எதிர்க் கட்சியாகவும் உருவெடுக்கிறது.

15 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிக்கிம் ஜனநாயக கட்சி, சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் பவன்குமார் நீங்கலாக அக்கட்சியின் 14 எம்எல்ஏக்களும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 32 எம்.எல்.ஏக்களை கொண்ட சிக்கிம் மாநில சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 17 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

 
First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...