Home /News /national /

இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டது

இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிறிய இமயமலை என்று கருதப்படும் சிக்கிம் மாநிலம் வேதி பொருள்கள், உரம் ஆகிவற்றில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறிய மாநிலமாக கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்திற்கு மாறிய சிக்கிம் மாநிலத்திற்கு ஐ. நா.சபை விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

    ஐ.நா.சபை கடந்த ஆண்டுகளில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை செய்தல், அணு ஆயுதங்கள், கடல் மாசுபாடு, பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகளுக்கு விருது வழங்கிவந்தது. ஆனால் இந்த ஆண்டு ஐ.நா.சபை தனது கொள்கையில், இயற்கை வேளண்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

    அந்த கொள்கையின் அடிப்படையில் , இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தல், மரம் நடுதல், மண்ணை பாதுகாக்கும் வகையில் பயிர்கள் நடுதல், வேதியியல் உரம் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல், ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த வகையில், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் மாறிய சிக்கிம் மாநிலத்திற்கு இந்தாண்டு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2017- ம் ஆண்டு வரை  சிக்கிமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கப்பதில் சிக்கிம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளதாக ஐ.நா. சபையின் அதிகாரிகள் பாரட்டியுள்ளனர்.



    அதனைதொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கியதற்காகவும், இயற்கை உரம் குறித்து மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் 2 வது இடத்தை பிரேசில், டென்மார்க் மற்றும் ஈக்குவடார் என 3 நாடுகளுக்கு இந்த விருது அளிக்கப்பட்டு உள்ளது.

    ALSO WATCH...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Fully organic vegetables, India, Sikkim, UN award

    அடுத்த செய்தி