முகப்பு /செய்தி /இந்தியா / புதிதாக ஒரு குழந்தை பிறந்தால் 100 மரங்கள் நடப்படும்... சிக்கிம் அரசு புது திட்டம்! குவியும் பாராட்டுகள்

புதிதாக ஒரு குழந்தை பிறந்தால் 100 மரங்கள் நடப்படும்... சிக்கிம் அரசு புது திட்டம்! குவியும் பாராட்டுகள்

மரக்கன்று

மரக்கன்று

இந்த புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஆஷா மற்றும் அங்கன்வாடி, பஞ்சாயத்து, வனத்துறை ஆகிய ஊழியர்களை சிக்கிம் அரசு களமிறக்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sikkim, India

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அம்மாநில அரசு சுற்றுச்சூழலை காக்க புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் இனி புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கள் நடப்படும் என மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார்.

இந்த விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 'Mero Rukh Mero Santati' (Plant a Tree, Leave a Legacy) மரம் நடுங்கள், உங்கள் தடத்தை பதிவு செய்யுங்கள் என்ற கருத்தில் இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய திட்ட விழாவில் மாநில தலைமை செயலாளர் விபி பதக், வனத்துறை செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் பங்கேற்றனர். முதலமைச்சர் பிரேம் திட்டத்தை தொடங்கி வைத்து புதிதாக பெற்றோரான தம்பதியருக்கு 100 மரக்கன்றுகளையும், விதைகளையும் வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் பிரேம் சிங், இந்த பூமிக்கு புதிய குழந்தை ஒன்றின் வருகையை புதிதாக ஒரு மரக்கன்றுகளை வைத்து வரவேற்று இந்தியாவிலேயே புதிய திட்டத்தை நாம் செய்து காட்டுகிறோம். குழந்தைகளும் மரங்களும் ஒரே சேர வளர்வது என்பது குறியீடாகும்.

இயற்கையுடன் சிக்கிம் மக்களின் உறவானது காலம்கடந்த ஒன்று. நாம் மலை, நதி, குகை என்று பிரிக்காமல் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் புனிதமாக கருதுகிறோம். இந்த புதிய திட்டம் மூலம் இயற்கை உடனான நமது காலம் கடந்த பிணைப்பை மேலும் வலுவாக்குகிறது. எதிர்கால தலைமுறைக்கு அரோக்கியமான, மகிழ்ச்சியான சூழலை இது தரும் என்றுள்ளார்.

இந்த புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஆஷா மற்றும் அங்கன்வாடி, பஞ்சாயத்து, வனத்துறை ஆகிய ஊழியர்களை சிக்கிம் அரசு களமிறக்குகிறது. வாட்ஸ்ஆப், இமெயில் போன் டிஜிட்டல் தளங்கள் மூலம் புதிய பெற்றோர்களை தொடர்பு கொள்ளவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. சிக்கிம் அரசின் இந்த புதிய திட்டத்தை பலரும் வரவேற்கின்றனர்.

First published:

Tags: Environment, Sikkim, Tree plant, Tree plantation