விமான நிலைய வளாகத்திற்குள் சிறிய வாளை எடுத்துச் செல்ல சீக்கிய ஊழியர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டிருக்கிறது.
சீக்கிய மத நம்பிக்கையின்படி அவர்கள் எப்போதும் வளைந்த வாள் ஒன்றை அணிந்திருக்க வேண்டும். இந்த வாளுக்கு கிர்பான் என்று பெயர். இவ்வாறு வாள் அணியும் கலாசாரத்தை அவர்கள் எப்போதும் கடைபிடித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உள்நாட்டு விமானப் பாதுகாப்புப் பணியகமான BCAS மார்ச் 4 அன்று, புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ''சீக்கிய ஊழியர்கள், எந்த இந்திய விமான நிலைய வளாகத்திலும் கிர்பானை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம், சீக்கிய பயணிகள் இந்தியாவுக்குள் கிர்பானை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதிகபட்சமாக 9 அங்குலம் கொண்ட கிர்பானை எடுத்துச் செல்லலாம்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க - ஐந்து மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு எப்போது? மூன்று மாநிலங்களில் பா.ஜ.கவில் குழப்பம்
சீக்கிய விமான ஊழியர்கள் கிர்பானை வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவு, சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி உள்பட பல்வேறு சீக்கிய அமைப்புகள் விமானப் போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இதுதொடர்பாக சீக்கிய அமைப்புகள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தன. அதில், மார்ச் 4-ம் தேதி வெளியான உத்தரவு என்பது சீக்கியர்களின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க - பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு
இந்த நிலையில், கிர்பானை கொண்டு செல்வதற்கு சீக்கிய விமான ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கி புதிய உத்தரவு வெளியாகி உள்ளது. இதன்படி, இந்தியாவின் எந்த விமான நிலைய வளாகத்திற்குள்ளேயும், சீக்கிய பணியாளர்கள் கிர்பானை வைத்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airport