Home /News /national /

சிறு தானியங்கள் குறித்து தொல்காப்பியம், புறநானூற்றை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேச்சு

சிறு தானியங்கள் குறித்து தொல்காப்பியம், புறநானூற்றை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

சிறுதானியங்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும்- பிரதமர் மோடி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சிறுதானியங்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    நாட்டு மக்களிடையே மனம் திறந்து பேசும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.  சுதந்திரத்தின் இந்த மாதங்களில் நமது தேசமெங்கும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், அமுத காலத்தின் அமுதப்பெருக்கு பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று  தெரிவித்தார்.

    நீர் சேமிப்பு, நீர் பாதுகாப்புக்கான முயற்சிகளில்  நாட்டு மக்கள் அனைவரும் முழு வீச்சில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறித்தினார். நாட்டு மக்கள் அனைவரும் வரவிருக்கும் ஊட்டசத்து மாதங்களில், ஊட்டசத்துக் குறைபாட்டைக் களையும் முயற்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

     உலகெங்கிலும் சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி,  உலகின் முக்கியஸ்தர்களுக்கும் நமது சிறுதானியங்கள் மிகவும் பிடித்திருக்கிறது. அதைப் பற்றி பல தகவல்களை திரட்ட முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்தார். 

    மேலும், " நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதைப் போலவே புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும்" என்று தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: நொடிகளில் தரைமட்டமான நொய்டா பிரமாண்ட இரட்டை கோபுரங்கள்.. அருவி உள்வெடிப்பு முறையில் தகர்க்கப்பட்டது

    சிறுதானியங்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதை நாம் அனைவரும் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Mann ki baat, PM Modi

    அடுத்த செய்தி