நவ்ஜோத் சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தர முடியாது என கைவிரித்த அமரீந்தர் சிங் - பஞ்சாப் காங் உட்கட்சி பூசல்!

அமரீந்தர் சிங் Vs நவ்ஜோத் சிங் சித்து

மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் என இரண்டு பதவிகளுமே ஜாட் சமூகத்திற்கே கொடுக்க முடியாது என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

  • Share this:
முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவை, பஞ்சாபின் துணை முதல்வராகவோ, மாநில காங்கிரஸ் தலைவராக்கவோ முடியாது என்று காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தெரிவித்துள்ளார் முதல்வர் அமரீந்தர் சிங்.

பஞ்சாப் முதல்வரான அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி 2019ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சித்து, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜாவேத் பஜ்வாவை ஆரத்தழுவியதால் அவர் மீது அதிருப்தியடைந்தார் அமரீந்தர் சிங்.

கேப்டன் அமரீந்தர் சிங் உடனான மனக்கசப்பை அடுத்து 2019ம் ஆண்டு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து.

அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தலைமை பொறுப்பு தொடர்பாக அமரீந்தருக்கும், சித்துவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. தன்னை துணை முதல்வராக அல்லது மாநில காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என சித்து காய் நகர்த்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் சித்துவை விட தகுதி வாய்ந்த சீனியர்கள் இருப்பதால் சித்துவை துணை முதல்வர் அல்லது மாநில தலைவராக்க முடியாது என கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Also Read:    இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை?

மேலும், அவர் அமைச்சரவையில் விட்டுச் சென்ற இடம் உள்ளது, வேண்டுமெனில், சித்து அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என அமரீந்தர் கூறியுள்ளார்.

இருப்பினும் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் என இரண்டு பதவிகளுமே ஜாட் சமூகத்திற்கே கொடுக்க முடியாது என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

சித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆம் ஆத்மிக்கு சென்றுவிட கூடாது என்பதில் கவனமாக இருந்து வரும் காங்கிரஸ் மேலிடம், அவருக்கு மதிப்புவாய்ந்த ஒரு பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Also Read:   இந்தியாவின் மலிவு விலை கொரோனா தடுப்பூசி: பிற தடுப்பூசிகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டது?

பஞ்சாபில், கடந்த, 2015ம் ஆண்டு, சீக்கியர்களின் புனித நுால் கிழித்தெறியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்காபூரா பகுதியில், சீக்கிய மதத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் அமரீந்தர் அரசுக்கு பின்னடைவாக அமையக்கூடாது எனவும் அந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அமரீந்தருக்கு காரியக் கமிட்டி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published by:Arun
First published: