இந்திய பெண் நடத்தி வரும் "சைட்கார்" பார் : உலகின் 100 சிறந்த பார்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!

இந்திய பெண் நடத்தி வரும் "சைட்கார்" பார் : உலகின் 100 சிறந்த பார்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!

டெல்லியில் வசிக்கும் மீனாட்சி சிங் என்ற பெண்நடத்தும் பார் உலகின் மிக சிறந்த 100 பார்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

டெல்லியில் வசிக்கும் மீனாட்சி சிங் என்ற பெண்நடத்தும் பார் உலகின் மிக சிறந்த 100 பார்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

 • Share this:
  டெல்லியில் வசிக்கும் மீனாட்சி சிங் ( Meenakshi Singh) என்ற பெண் ஹோட்டல் நிர்வாகம் குறித்த பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார். இவர் பார்டெண்டிங் மற்றும் மிக்ஸோலஜி (bartending and mixology) பற்றிய துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு பாரை சொந்தமாக வைத்து நடத்துவது மீனாட்சியின் கனவாக இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு மீனாட்சி தனது வழிகாட்டியான, மூத்த பார்டெண்டர் நிபுணர் மற்றும் வணிக கூட்டாளர் யாங்தூப் லாமாவுடன் (Yangdup Lama) இணைந்து சைட்கார் (Sidecar) பாரை தொடங்கினார். 

  இன்று, அவரது கனவு உண்மையானது மட்டுமல்ல, சைட்கார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அவரது பார் உலகின் 100 சிறந்த பார்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வேறு எந்த பாரும் இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. சர்வதேச பட்டியலில் இவரது பார் 91வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் சிறந்த பாராக பல உள்நாட்டு விருதுகளை வென்றுள்ள சைட்கார் பாருக்கு இது  இன்னொரு சிறப்பு என்றாலும், ஒரு பெண் நடத்தும் ஒரு இந்தியப் பார் சர்வதேச பட்டியலில் முதல் 100 இடங்களில் ஒன்றை பிடித்தது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

  ஏனென்றால், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவில் பெண்கள் மதுபானம் பரிமாறவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. 2000-களின் முற்பகுதியில் ஹோட்டல் நிர்வாகத்தைப் படிக்கும் போது மீனாட்சி தனியார் நிகழ்வுகளையும் விருந்துகளையும் பார்டெண்டிங் செய்யத் தொடங்கியபோது, உண்மையில் இந்தியாவில் பெண்கள் மதுபானம் செய்வது சட்டவிரோதமானது. நாளடைவில் இந்த சட்டம் முதன்முதலாக 2007ல் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கும் சட்டமியற்றுவதற்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிமை அளித்தது. 

  இந்த நிலையில், 2010-க்குப் பிறகுதான் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பார்டெண்டிங் சட்டத்தை இந்திய அரசு ரத்து செய்தது. அந்த சமயத்தில், மீனாட்சி சிங் சர்வதேச மதுபான பிராண்டுகளான டியாஜியோ மற்றும் பெர்னோட் ரிக்கார்ட் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். இது குறித்து பேசிய அவர், " பெண்களால் மதுபானம் பரிமாற முடியாது என்று ஒரு பழமையான பிரிட்டிஷ் சட்டம் இருந்தது," என்று கூறினார்.

  யானை-யை ரசித்த புலி: ட்வீட் செய்த ஆனந்த் மகிந்திரா

  அதன்பிறகு குருக்ராமில் ஸ்பீக்கஸி என்ற பாரை நிறுவ லாமாவுடன் மீனாட்சி ஜோடி சேர்ந்தார். மேலும் 2018ம் ஆண்டளவில், அவர் சைட்காரைத் தொடங்கினார். இன்று, இந்த பார் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பார்களில் ஒன்றாக திகழ்கிறது. அதன் எலெக்ட்டிக் மெனுவுடன் பியூஷன் காக்டெய்ல் பானங்கள் உள்ளன. ஸ்தாபனமும் சிறந்த நட்பு சூழலை கொண்டுள்ளது. இருவரும் தங்கள் சொந்த டிங்க்சர்கள் (tinctures), பிட்டர்ஸ் (bitters) மற்றும் சிரப்ஸை (syrups) கொண்டு வளர்க்கிறார்கள்.    
  View this post on Instagram

   

  A post shared by Sidecar (@sidecarindia)


  தென் டெல்லியின் உயர்ந்த சந்தை கிரேட்டர் கைலாஷ் II சுற்றுப்புறத்தில், காபி கடைகள் மற்றும் உணவகங்கள் வரிசையாக உள்ள ஒரு தெருவில், இந்தியாவின் சிறந்த  சைட்கார் பார் அமைந்துள்ளது.  இந்தியாவில் பார் துறையில் ஏற்படும் மாற்றத்தால், அதிகமான பெண்கள் இப்போது பார்டெண்டிங் மற்றும் விருந்தோம்பல் துறையில் சேர விரும்புகின்றனர். அதிகமான மாநிலங்கள் மதுபானம் வழங்கும் பெண்களுக்கு எதிரான சட்டங்களை மாற்றி வருவதால், தற்போது பெண்கள் இந்த இலாபகரமான துறையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: