முகப்பு /செய்தி /இந்தியா / வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டப் பேரவையில் ஆவேசமாக பேசிய சித்தராமையா

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டப் பேரவையில் ஆவேசமாக பேசிய சித்தராமையா

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக உரையாற்றி உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 23) ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். ஆளும் பாஜக அரசையும், காவல்துறையினர் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்துவந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருடைய வேட்டி அவிழ்ந்து விழுந்துள்ளது. இதைக் கவனிக்காத அவர், தொடர்ந்து ஆளும் பாஜக அரசை விமர்சனம் செய்துவந்தார்.

வேட்டி அவிழ்ந்து விழுவதைக் கவனித்த அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார், அவரின் காதருகே சென்று சம்பவத்தை விவரித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொள்ளாமல், என்னது வேட்டி கீழே விழுந்துவிட்டதா? என்று மைக்கிலேயே கூறியுள்ளார்.

' isDesktop="true" id="568993" youtubeid="4eUmkET-Yfk" category="national">

இதனால் ரகசியமாக சிவகுமார் கூறியதை சித்தராமையா அவையில் அனைவருக்கும் தெரியுமாறு மைக்கில் கூறிவிட்டார். இதனால் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

மேலும் சமீப நாட்களில் எனது வயிறு சற்று பெரிதாகிவிட்டது. எனக்கு கொரோனா வந்து சென்ற பிறகு, எனது உடல் எடை 5 கிலோ வரை அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் இவ்வாறு நடந்து விடுகிறது. வேட்டியை சரிசெய்துவிட்டு பேசுகிறேன் என்றார் சித்தராமையா.

First published:

Tags: Karnataka, News On Instagram