Home /News /national /

நிதானம் இழந்த சித்தராமையா! பெண்ணின் துப்பட்டாவை இழுத்ததால் பரபரப்பு

நிதானம் இழந்த சித்தராமையா! பெண்ணின் துப்பட்டாவை இழுத்ததால் பரபரப்பு

சித்தராமையா

சித்தராமையா

சித்தராமையாவின் மகனான எம்.எல்.ஏ யாதிந்த்ராவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மைக்கில் புகார் எழுப்பினார் அந்த பெண்...

  • News18
  • Last Updated :
தன்னுடைய மகன் குறித்து புகார் எழுப்பிய பெண்ணின் கையிலிருந்து மைக்கை பிடுங்க கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா முயற்சி செய்தபோது பெண்ணின் துப்பட்டாவும் அவருடைய கையில் சிக்கியது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பெண் ஒருவர் மைக்கில் புகார் கூறினார். சித்தராமையாவின் மகனான எம்.எல்.ஏ யாதிந்த்ராவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மைக்கில் புகார் எழுப்பினார்.

அதனால், ஆத்திரமடைந்த சித்தராமையா பெண்ணின் கையிலிருந்து மைக்கை பிடுங்கினார். அப்போது, சித்தராமையாவின் கை, பெண்ணின் துப்பட்டாவையும் சேர்த்து இழுத்தது. அதனால், பெண் அணிந்திருந்த துப்பட்டா பாதி கீழே சரிந்தது. சித்தராமையா மைக்கைப் பிடிங்கிய பிறகும், பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.

பின்னர், அங்கே கூடியிருந்தவர்கள் பெண்ணை சமாதானப்படுத்தி உட்காரவைத்தனர். இந்த விவகாரம் முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. சித்தராமையாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. குறிப்பாக, சித்தராமையாவின் செயலை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.



Also see:

Published by:Karthick S
First published:

Tags: Karnataka, Siddaramaiah

அடுத்த செய்தி