குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் மோடி – சித்தராமையா குற்றச்சாட்டு

news18
Updated: May 16, 2018, 5:26 PM IST
குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் மோடி – சித்தராமையா குற்றச்சாட்டு
சித்தராமையா
news18
Updated: May 16, 2018, 5:26 PM IST
பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில். பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளிலும், பிற கட்சி வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளபோதிலும் தனித்து ஆட்சியமைப்பதற்கு அக்கட்சிக்கு 9 இடங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில், பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்க்க காங்கிரஸ் முடிவு செய்தது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என்று காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், குமாரசாமி உள்ளிட்டோர் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தங்களது முடிவை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜக தலைவர் எடியூரப்பா ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, எடியூரப்பாவை ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநர் நியாயமாக எங்களுக்குத்தான் அழைப்பு விடுக்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை என்றார் சித்தராமையா.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்