காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காது: சித்தராமையா ஒப்புதல்!

பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தனிப்பட்ட முறையில் 150 தொகுதிகளைத் தாண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும்.

காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காது: சித்தராமையா ஒப்புதல்!
சித்தராமையா
  • News18
  • Last Updated: April 15, 2019, 4:21 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்காது என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவுபெற்றுள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில், ஏப்ரல் 18-ம் தேதி அந்த மாநிலத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில், பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குp பேட்டி அளித்த சித்தராமையா, ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக் கூடிய எண்ண ஓட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்கள், மதவாத, பிரிவினைவாத சக்திகளை புறக்கணிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தனிப்பட்ட முறையில் 150 தொகுதிகளைத் தாண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெற முடியாது.


ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிப்பட்ட முறையில், பெரும்பான்மை பலத்தைப் பெறும். மோடி அலை என்பது இல்லை. மாறாக, பிரிவினைவாத மற்றும் மதவாத சக்திகளை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகியுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறை, ஆட்சிக்கு வராமல் தடுக்கும். என்னைப் பொறுத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மையைப் பிடிக்கும். காங்கிரஸ் அதில், அதிக தொகுதிகளை வென்றிருக்கும்’’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading