ஹோம் /நியூஸ் /இந்தியா /

வெட்டி துண்டாகிவிடுவேன்...கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா 2020-ல் போலீஸிடம் கொடுத்த ஷாக் புகார்

வெட்டி துண்டாகிவிடுவேன்...கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா 2020-ல் போலீஸிடம் கொடுத்த ஷாக் புகார்

கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தாவின் போலீஸ் புகார்

கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தாவின் போலீஸ் புகார்

நவம்பர் 23, 2020-ல் ஷ்ரத்தா அளித்த புகார்மற்றும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் கரணிடம் அவர் சொன்னதும் ஒத்துப்போவது தற்போது தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi |

  தனது காதலன் அஃப்தாப் பூனாவாலாவால் கழுத்தை நெரித்து, உடலை துண்டு துண்டாக நறுக்கி, டெல்லியில் உள்ள காட்டில் வீசியதாகக் கூறப்படும் ஷ்ரத்தா வால்கர், சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள திலுஞ்ச் போலீஸில் புகார் அளித்துள்ளது தற்போது வெளிவந்துள்ளது.

  ஷ்ரத்தாவும் அஃப்தாப்பும் ஒரே வீட்டில் தங்கியிருந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆப்தாப் ஸ்ரத்தாவை அடித்துள்ளார். அதன் பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஷ்ரத்தா புகார் கொடுத்துள்ளார்.

  இதன் பின்னர் "எங்களுக்கு இனி எந்த சண்டையும் இல்லை" என்று எழுத்துப்பூர்வமாக மற்றொரு அறிக்கையை ஷ்ரத்தா அளித்ததாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கூறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஷ்ரத்தா தன்னுடன் பணியாற்றும் கரணிடம் பேசியுள்ளார்.

  காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற வழக்கில் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

  நவம்பர் 23, 2020-ல் ஷ்ரத்தா அளித்த புகார்மற்றும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் கரணிடம் அவர் சொன்னதும் ஒத்துப்போவது தற்போது தெரியவந்துள்ளது. அதோடு அவள் காயப்பட்ட முகத்தின் புகைப்படத்தையும் கரணுக்கு பகிர்ந்துள்ளார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் உள் காயங்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றுள்ளார்.

  "இன்று அவர் என்னை மூச்சுத்திணறிக் கொல்ல முயன்றார். அவர் என்னைப் பயமுறுத்துகிறார். என்னைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி எறிந்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர் என்னை ஆறு மாதங்களாக அடித்து சித்ரவதை செய்கிறார். எனக்கு தைரியம் இல்லை.

  அவர் என்னை அடித்ததும், கொலை செய்ய முயன்றதும் அவனது பெற்றோருக்குத் தெரியும். நாங்கள் ஒன்றாக வாழ்வது குறித்தும் அவர்களுக்குத் தெரியும். வார இறுதி நாட்களில் வந்து செல்வார்கள். எந்த நேரத்திலும் நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவருடைய குடும்பத்தினரின் ஆசீர்வாதம் இருந்ததால் அவருடன் வாழ்ந்து வந்தேன்.

  எடை குறைஞ்சாரா? 8 கிலோ கூடி இருக்கார்... சொகுசாக சாப்பிடும் சத்யேந்தர்.. வீடியோ வெளியிட்ட சிறை நிர்வாகம்!

  ஆனால் இனிமேல் நான் அவருடன் வாழத் தயாராக இல்லை, எனவே அவர் என்னை எங்கு பார்த்தாலும் என்னைக் கொல்லவோ அல்லது என்னைக் காயப்படுத்தவோ என்று மிரட்டி வருவதால் எனக்கு என்ன உடல் ரீதியான காயம் ஏற்பட்டாலும் அவரிடமிருந்து வந்ததாகக் கருத வேண்டும்." என்று தனது கடிதத்தில் ஷ்ரத்தா குறிப்பிட்டுள்ளார்.

  அவர்கள் எவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு விடுமுறைக்காக ஒன்றாகச் சென்றுள்ளனர். அதன் பிறகு தான் கொலை சம்பவம் நடந்துள்ளது.

  மெஹ்ராலி காட்டில் கண்டெடுக்கப்பட்ட சில உடல் பாகங்கள் உண்மையில் அவரதுதான் என்பதை உறுதிப்படுத்தும் தடயவியல் சோதனையின் மூலம், போலீசார் பொருள் தடயங்களைத் தேடி வருகின்றனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Murder case