ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஷ்ரத்தா கொலை வழக்கில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் தயார் - டெல்லி காவல்துறை தகவல்

ஷ்ரத்தா கொலை வழக்கில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் தயார் - டெல்லி காவல்துறை தகவல்

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு

தடயவியல் நிபுணர்களின் டிஎன்ஏ அறிக்கை முடிவுகள் இந்த வழக்கு விசாரணை விரைந்து முடிக்க உதவும் என காவல்துறையினர் நம்புகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

நாட்டையே உலுக்கிய டெல்லி ஷரத்தா வாக்கர் கொலையில் தடயவியல் நிபுணர்களின் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், உடல் பாகங்கள் ஆகியவற்றின் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா. உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே பழக்கம் காதலாக மலர்ந்த நிலையில், பெண்ணின் வீட்டை மீறி இருவரும் டெல்லியில் லிவ் இன் முறையில் வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில்,இருவருக்கும் நீண்ட காலமாக மோதல் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் காதலி ஷ்ரத்தாவை அஃப்தப் கொடூரமாக கொலை செய்துள்ளார். அத்துடன் உயிரிழந்த பெண் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி பல பகுதிகளில் வீசியுள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் பல மாதங்களுக்கு பின் அம்பலமாகி நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், அஃப்தப் வீட்டருகே இருந்து 13 எலும்புகளை காவல்துறை கண்டெடுத்தனர்.

அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி ஷ்ரத்தாவுடன் பொருந்தி போகிறதா என்று தடயவியல் துறை சோதித்தது. இந்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதாகவும் இதில் ஷ்ரத்தாவின் டிஎன்ஏவின் உடன் நிச்சயம் பொருந்தி போகும் என போலீசார் நம்புகின்றனர். இது உறுதி செய்யும் படும் பட்சத்தில் வழக்கு விசாரணை விரைந்து முடிக்கப்படும் என காவல்துறையினர் நம்புகின்றனர். அதேபோல், அஃபதாப்பிடம் நார்கோ மற்றும் பாலிகிராப் சோதனை நடத்தி உண்மையை கண்டறியும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Delhi, Murder