ஆளுநர் உத்தரவிட்டும் சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு... கடுப்பில் எதிர்க்கட்சிகள்...!

கமல் நாத்
- News18
- Last Updated: March 16, 2020, 6:59 AM IST
மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் இன்று சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பேரவை நிகழ்ச்சிக் குறிப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தகவல் இடம்பெறாததால், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக திகழ்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து சிந்தியாவின் ஆதரவாளர்களான மாநில அமைச்சர்கள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் முகாமிட்டனர்.
மேலும் 22 பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர். அதில், சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதையடுத்து 6 பேரின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் எம்.எல்.ஏ பதவியையும் இழந்தனர். 
இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன், சபாநாயகருக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை 16-ம் தேதி தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரின் முதல் நாளில் தான் உரையாற்றிய உடன், முதல் நடவடிக்கையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். எனினும், அவை நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்துள்ளன.
எனினும், எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. ஜெய்ப்பூர் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 92 பேரும், போபால் அழைத்து வரப்பட்டுள்ளனர்.230 எம்எல்ஏக்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில், 114 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்எல்ஏ மற்றும் 4 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்தது. 109 எம்எல்ஏக்களை கொண்ட பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது.

பாஜக எம்எல்ஏக்கள் இருவரின் மறைவால் இரு இடங்களும் காலியாகின. தற்போது சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரின் ராஜினாமாவால், அவையின் பலம் 222 ஆகியுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரசிற்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
எஞ்சியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால், அவையின் பலம் மேலும் குறைந்து 206 ஆகும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 104 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். பாஜகவிடம் 107 எம்எல்ஏக்கள் உள்ளதால், பாஜக எளிதாக ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகும். இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிப்பாரா? 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்படுமா? தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து பாஜக அரியணை ஏறுமா? என்ற கேள்விகளுக்கு விடையை எதிர்நோக்கி காத்திருக்கிறது மத்திய பிரதேசம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

ஜோதிர்ராதித்ய சிந்தியா

சிவ்ராஜ்சிங் சவுகான்