குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்று சட்டத்தில் எங்கு இருக்கிறது? காட்டுங்கள்: கேரள காங். எம்.பி.யை மடக்கிய உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

வேளாண் பொருட்களுக்கு ஒப்பந்தம் போடுவது விவசாயிகள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற வாக்குறுதியைப் பொய்த்துப் போகச்செய்யும் என்று கேரள காங்கிரஸ் எம்.பி. தன் மனுவில் கூறியுள்ளார்.

 • Share this:
  புதிதாக நிறவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களில் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை விலக்கிக் கொள்ளப்படும் என்று எந்த சட்டப்பிரிவில் உள்ளது என்பதைக் காட்ட முடியுமா என்று கேரள காங்கிரஸ் எம்.பி.யை மடக்கியது உச்ச நீதிமன்றம்.

  கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் மேற்கொண்ட மனுவில், ‘குறைந்தப் பட்ச ஆதாரவிலையின்றி விவசாயிகள் பிழைக்க வழியில்லை’ என்று கோரியிருந்தார்.

  இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி போப்டே அடங்கிய பெஞ்சின் கீழ் நேற்று நடைபெற்றது.

  அவர் தன் மனுவில், “பன்னாட்டு நிறுவனங்களின் கார்ப்பரேட் பேராசைக்கு விவசாயப் பொருட்களைத் திறந்து விடலாமா” என்று கேட்டிருந்தார்.

  நீதிபதிகள் இதற்கு, “ஆகவே பழைய முறையே தொடர வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இந்தப் புதிய வேளாண் சட்டங்களின் எந்தப் பிரிவில் குறைந்த பட்ச ஆதார விலை விலக்கிக் கொள்ளப்படும் என்று உள்ளது என்பதைக் காட்டினீர்கள் என்றால் சவுகரியமாக இருக்கும்” என்று மடக்கினர்.

  ஆனால் டி.என்.பிரதாபனின் இந்த மனுவையும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பிற மனுக்களுடன் சேர்த்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

  பிரதாபன் தன் மனுவில், “மண்டி முறையை ஒழித்து விட்டால் விவசாயச் சந்தை கார்ப்பரேட்களின் பேராசை வலையில் சிக்கும். இவர்களுக்கு லாபம் தான் குறிக்கோள், விவசாயிகளின் ஏழ்மையல்ல. குறைந்தபட்ச ஆதார விலைதான் விவசாயிகளை சுரண்டலிலிருந்து காக்கிறது.

  விவசாயப்பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்று கூறி இடர்பாடுகளை நாம் புறமொதுக்க முடியாது, மண்டி முறையை வலுப்படுத்தி குறைந்தப் பட்ச ஆதார விலையை ஒழுங்காக நிர்வகிப்பதுதான் இப்போதைய தேவை.

  வேளாண் பொருட்களுக்கு ஒப்பந்தம் போடுவது விவசாயிகள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற வாக்குறுதியைப் பொய்த்துப் போகச்செய்யும்” என்றார்.

  இதற்குப் பதிலடியாகத்தான் உச்ச நீதிமன்றம் குறைந்தபட்ச ஆதாரவிலை எங்கு கைவிடப்படுகிறது என்று சட்டத்தில் உள்ளது? காட்டுங்கள் என்று கூறி வழக்கை பிற வழக்குகளோடு கோர்த்து விட்டது.
  Published by:Muthukumar
  First published: