Home /News /national /

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 0% ஆகக் குறைந்த அவலம்- அசாம் அரசுப்பள்ளிகளுக்கு நோட்டீஸ்

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 0% ஆகக் குறைந்த அவலம்- அசாம் அரசுப்பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அசாம் மாநில கல்வித்துறையின் வாசகம்

அசாம் மாநில கல்வித்துறையின் வாசகம்

10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் பலர் தோல்வியடைந்தது குறித்தும், தேர்வு முடிவுகள் படுமோசமானது எப்படி என்று விளக்கம் கேட்டும் 138 அரசுப்பள்ளிகளுக்கு அசாம் மாநில பள்ளிக்கல்வி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் பலர் தோல்வியடைந்தது குறித்தும், தேர்வு முடிவுகள் படுமோசமானது எப்படி என்று விளக்கம் கேட்டும் 138 அரசுப்பள்ளிகளுக்கு அசாம் மாநில பள்ளிக்கல்வி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மொத்த தேர்ச்சி விகிதமே 56.49% தான். 2021-ல் இது 93.10% ஆக இருந்தது. 2021-ல் ஏன் 93% என்று கேட்டால் கொரோனாவினால் பள்ளிகள் மூடல் பாடத்திட்டங்களை சரிவர முடிக்க முடியாமை, ஆன் லைன் வகுப்புகள் இன்மை போன்றவற்றினால் மாணவர்களின் கடந்த தேர்வு முடிவுகளை வைத்து ஒரு மதிப்பீட்டு முறைப்படி பாஸ் என்று போட்டு விட்டனர். இதனால் 93%.

    இது ஏன் பிரச்சனையாயிற்று என்றால் 30 அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பதால். மேலும் 108 பள்ளிகளில் 10%-க்கும் கீழ் தேர்ச்சி படுசரிவு கண்டுள்ளது. இது எச்சரிக்கை மணி ஒலிக்க இப்போது 138 அரசுப்பள்ளிகளுக்கு அசாம் மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இடைநிலைக் கல்வி இயக்குநரான மம்தா ஹோஜாய், இந்தப் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், அதில்,மாணவர்களால் ஏன் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதை விளக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஜூன் 9ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இடைநிலைக் கல்வி வாரியத்தின் கருத்துப்படி, அசாம், கச்சார் மாவட்டம் 14 மோசமாக செயல்படும் பள்ளிகளுடன் அட்டவணையில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து கர்பி அங்லாங் மாவட்டம் 11, கோல்பாரா மாவட்டம் ஒன்பது, ஜோர்ஹட் மற்றும் நாகோன் தலா எட்டு, மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆறு பள்ளிகளுடன் மிக மோசமான 10ம் வகுப்பு முடிவுகளைக் கொண்டுள்ளது.

    திப்ருகர் மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஐந்து பள்ளிகளும், துப்ரி மற்றும் மேற்கு கர்பி அங்லாங் தலா நான்கு, பார்பெட்டா மற்றும் தெற்கு சல்மாரா மாவட்டங்களில் தலா மூன்று பள்ளிகள் கல்வித்தரத்தில் படுமோசமாக உள்ளன.

    மறுபுறம், அசாம் உயர்நிலை இடைநிலைக் கல்வி கவுன்சில் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை 11 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களையும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு உயர்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட இடர்பாடுகளினால் பரீட்சைக்குத் தேற்ற முடியாத பல மாணவர்களைக் கருத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகள் மே 4 முதல் 28 வரை நடைபெறவிருந்தன. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அதிகாரிகள் தேதிகளை 10 நாட்களுக்கு மேல் தள்ளினர், ஆனால் நிலைமை சீரடையவில்லை.
    Published by:Muthukumar
    First published:

    அடுத்த செய்தி