எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுரை

எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுரை
உச்ச நீதிமன்றம்
  • Share this:
எம்.பி, எம்.எல்.ஏகளை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகரிடம் இருக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வென்ற தௌநாஜாம் ஷ்யாம் குமார், பின்னர் பா.ஜ.கவில் இணைந்து அமைச்சரானார். அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கில், ‘சபாநாயகர் ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் அவரால் தன்னிச்சையாக தகுதி நீக்கம் தொடர்பாக முடிவு எடுக்க முடியுமா? எம்.பி, எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இன்னமும் சபாநாயகரிடம் இருக்க வேண்டுமா? என்பதை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நிரந்தர அமைப்பையோ அல்லது தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பையோ உருவாக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.


Also see:

First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்