நான்கு நாள் முதல்வர்! ஜெகதாம்பிகா பால், எடியூரப்பா வரிசையில் இடம் பிடித்த தேவேந்திர பட்னவிஸ்

நான்கு நாள் முதல்வர்! ஜெகதாம்பிகா பால், எடியூரப்பா வரிசையில் இடம் பிடித்த தேவேந்திர பட்னவிஸ்
தேவேந்திர பட்னவிஸ்
  • News18
  • Last Updated: November 26, 2019, 7:43 PM IST
  • Share this:
ஜெகதாம்பிகா பால், எடியூரப்பா ஆகியோரைத் தொடர்ந்து மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்தவர் என்ற இடத்தைப் பெற்றுள்ளார் தேவேந்திர பட்னவிஸ்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன் தேவேந்திர பட்னவிஸ் கடந்த சனிக்கிழமையன்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தேவேந்திர பட்னவிஸ் நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, பட்னவிஸ் முதல்வரை பதவியை ராஜினாமா செய்தார். அவர், முதல்வராக பதவியேற்ற நான்காவது நாளில் பதவியை இழந்தார். அதன்மூலம், மிகக் குறைந்த நாள் முதல்வராக பதவியில் இருந்தவராக இந்திய வரலாற்றில் இடம்பிடித்தார்.

முன்னதாக, 2018-ம் ஆண்டு மே 17-ம் தேதி போதிய பெரும்பான்மையில்லாத நிலையிலும் கர்நாடாக மாநிலத்தில் முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். பின்னர், இரண்டாவது நாளில் மே 19-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த கல்யான் சிங்கின் ஆட்சி கலைக்கப்பட்டு 1988-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஜகதாம்பிகா பால் நியமிக்கப்பட்டார். கல்யான் சிங், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் கல்யான் சிங்கை மீண்டும் முதல்வராக அறிவித்தது. அப்போது, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கல்யான் சிங் வெற்றி பெற்றார். அதனால், ஜகதாம்பிகா பால் இரண்டு நாள்கள் மட்டுமே முதல்வராக நீடித்தார்.

மேகாலயாவில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.சி.மாரக் என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர், 12 நாள்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ராஜினாமா செய்தது. அவர், 13 நாள்கள் மட்டுமே முதல்வராக நீடித்தார். முன்னதாக, 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை மேகாலயாவின் முதல்வராக மாரக் இருந்துள்ளார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு 1987-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நெடுஞ்செழியன் முதல்வராக இருந்தார். அதன்பின்னர், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது, அ.தி.மு.க ஜானகி அணி, ஜெ அணி என பிரிந்திருந்தது.சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மிகப் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. அப்போதைய சபாநாயகர் ஜானகி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இருப்பினும், ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-யை பயன்படுத்தி ஜானகியின் ஆட்சியைக் கலைத்தது. அதனால், 23 நாள்களில் ஆட்சியை இழந்தார் ஜானகி ராமச்சந்திரன்.

Also see:

First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading